தேசியக் கொடிக்கு மரியாதை இல்லையா? வாண்டடாய் வண்டியில் ஏறிய சூரி! தேசிய கொடியை எதில் கட்டியிருக்கார்?
சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய நடிகர் சூரி அதனை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்த நாள் சுதந்திர தின விழாவாக நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சென்னை செங்கோட்டையிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை செயின் ஜார்ஜ் கோட்டையிலும் தேசிய கொடி ஏற்றி அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
'கோவை குண்டு வெடிப்பு’ பாஜக பேரணியில் சர்ச்சையான முழக்கம்! பாஜகவினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு!

சுதந்திர தின பவள விழா
முன்னதாக 75 ஆம் ஆண்டு சுதந்திர தின பவள விழா சுதந்திர தின அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படும் எனவும் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார்.

தேசிய கொடி
இதையடுத்து நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், மோகன்லால், அக்ஷய் குமார், யாஷ் என கோலிவுட் பாலிவுட் மட்டுமல்லாது தெலுங்கு நட்சத்திரங்களும் கன்னட நடிகர்களும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர் அதன் ஒரு பகுதியாக நடிகர் சூரி, சென்னையில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றில் தேசியக்கொடி ஏற்றினார்.

நடிகர் சூரி
நல்ல விஷயம் தானே என்கிறீர்களா அதுதான் இல்லை இந்த தேசியக்கொடி ஏற்றியதில் தான் நடிகர் சூரிக்கு சிக்கலே வந்திருக்கிறது. பொதுவாக தேசியக்கொடியை ஏற்ற பல்வேறு விதிமுறைகள் உள்ளது. ஆனால் தற்போது வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடி ஏற்றும் போது சிறிய சிறிய குச்சிகளில் தேசியக் கொடியை கட்டி வீடுகளை பறக்க விட்டு வருகின்றனர்.
Recommended Video

மீண்டும் சர்ச்சை
ஆனால் நடிகர் சூரி வீடுகளை துடைக்கும் மாப்பில் இருக்கும் குச்சியை கழற்றி அதில் தேசியக் கொடியை ஏற்றி இருக்கிறார். வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய புகைப்படத்தை நடிகர் சூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் நிலையில் வீடு கூட்டும் குச்சியில் தேசிய கொடியை கட்டுவது எனவும் அவர் தேசியக்கொடியை அவமதித்துவிட்டார் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.