ஹெலிகாப்டர் விபத்து.. கடைசியாக ஹெலிகாப்டர் பறந்த வீடியோ காட்சி உண்மையா?.. பரபர தகவல்!
சென்னை: நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் பயிற்சி மையம் அருகில் காட்டேரி எனும் அடர்ந்த காட்டு பகுதி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாட்டு மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த பயங்கர விபத்தில் விமானப்படை கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவருக்கு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தீவிர விசாரணை
கடும் பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணையில் இந்தியா விமானப்படை ஈடுபட்டுள்ளது. ஏர்மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான விசாரணை குழுவினர் அந்த பகுதியில் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைரல் வீடியோ
விபத்து நடப்பதற்கு முன்பு அந்த ஹெலிகாப்டர் வானில் பறப்பதும், சிறிது நேரத்தில் கீழே விழுவது போன்ற சத்தத்துடன் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வைரலானது. கோவையை சேர்ந்த ஜோ, அவரது நண்பர் நாசர் இந்த வீடியோவை எடுத்து இருந்தனர். இந்த வீடியோ முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.

நிபுணர்கள் ஆய்வு
அந்த வீடியோ அடங்கிய செல்போனை கோவை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல் நீலகிரி மாவட்டம் மின்சாரத் துறைக்கு சம்பவ இடத்தில் High Transmission Lines மற்றும் High Voltage Poles ஆகியவை உள்ளதா? அது சேதமடைந்துள்ளதா? என்பதை சரிபார்க்கவும் போலீஸ் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video

வானிலை நிலவரம்?
விபத்து நடந்த இடம் அருகில் உள்ள வனப்பகுதிகளில் சிறப்பு அதிரடி படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விபத்து நடந்த அன்று சம்பவ பகுதியில் வானிலை நிலவரம் இருந்தது? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு நீலகிரி மாவட்ட போலீஸ் சார்பில் கடிதம் ஒன்றும் அனுப்பபட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications