கூட்டுறவு வங்கிகளின் இன்ப அதிர்ச்சி! லோன் விதிகளில் குபீர் சேஞ்ச்.. !யாருக்கெல்லாம் சலுகை
சென்னை: தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து பணம் வாங்குபவர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது... இதுவரை ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.7,000 வரை மட்டுமே கடன் கிடைத்து வந்தது. இப்போது அந்த தொகை ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது... இதனால் அவசர தேவைக்கு கடன் வாங்க நினைப்பவர்கள் கூடுதல் பணம் பெற முடியும்.. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமாக, கிராமப்புறங்களில் வசிக்கும் பலரும் இந்த சங்கங்கள் மூலம் நகைக்கடன் பெற்று வருகிறார்கள்..

கூட்டுறவு வங்கி - எவ்வளவு கடன்?
இந்த நிலையில், ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இனிமேல் ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சம் ரூ.10,000 வரை கடன் பெற முடியும். இதற்கு முன்பு இந்த வரம்பு ரூ.7,000 ஆக இருந்தது..
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பழைய கடன் வரம்பில் பொதுமக்களுக்கு கிடைக்கும் தொகை குறைவாக இருந்தது. இதை கருத்தில் கொண்டு கடன் தொகையை உயர்த்தியுள்ளனர்.
ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் கிடைக்கும் என்றாலும், எல்லாருக்குமே இந்த தொகை கிடைக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அடமானம் வைக்கும் நகையின் சந்தை மதிப்பும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை மட்டுமே கடன் வழங்கப்படும்.
ஒரு கிராமுக்கு ரூ.10000 என்ற வரம்பும், நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என்ற வரம்பும் கணக்கிடப்படும். இதில் எது குறைவான தொகையோ, அந்த தொகையே கடனாக வழங்கப்படும்.
யார் யாருக்கு இது பொருந்தும்?
இந்த புதிய கடன் வரம்பு புதிதாக நகைக்கடன் வாங்குபவர்களுக்கு பொருந்தும். அதேபோல், ஏற்கனவே கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்று, இப்போது அந்த கடனை புதுப்பிக்க வருபவர்களுக்கும் புதிய வரம்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் புதுப்பிக்கும்போது பழைய ரூ.7,000 வரம்புக்கு பதிலாக உயர்த்தப்பட்ட புதிய வரம்பின்படி கடன் கணக்கிடப்படும்.
புதிய கடன் வரம்பு - நன்மைகள்
இந்த மாற்றத்தால் எத்தனையோ நன்மைகளை பெற முடியும்.. குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள், சிறு வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள், ஏழை, நடுத்தர குடும்பத்தினர் என பலருக்கும் பயன் கிடைக்க வாய்ப்புள்ளது.
விவசாய பணிகளுக்கு பணம் தேவைப்படும்போதும், குழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு, குடும்பத்தில் ஏற்படும் அவசரத் தேவைகள் போன்றவற்றுக்கும் நகையை அடமானம் வைத்து பணம் பெறுபவர்களுக்கு கூடுதல் கடன் தொகை உதவியாக இருக்கும்... குறிப்பாக தனியார் நிதி நிறுவனங்களை நாடாமல் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற விரும்புவோருக்கு இந்த உயர்வு ஒரு வாய்ப்பாக அமையும்.
தங்கத்தின் சந்தை மதிப்பு
மேலும், கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நகைக்கடன் பெறும் வசதி தொடர்கிறது. ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் புதுப்பிக்கும்போதும் புதிய வரம்பு கிடைப்பதால் அவர்களுக்கும் பலன் கிடைக்கும். தங்கத்தின் சந்தை மதிப்புக்கு ஏற்ப கூடுதல் தொகை பெறும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இதனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தங்களது அவசரப் பணத் தேவைக்கு கூட்டுறவு அமைப்புகளை அணுக முடியும்...!!


Click it and Unblock the Notifications
