கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் குறைந்த வட்டியில்! விவசாயிகளுக்கு குட் நியூஸ்! அரசு வரப்பிரசாதம்
சென்னை: கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களில், நகையை அடமானமாகக் கொண்டு வழங்கப்படும் விவசாய நகைக்கடன் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள், அரசு செய்து தந்துள்ள வசதிகள் இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
நம்முடைய நாட்டை பொறுத்தவரை விவசாயிகளின் நலனில் அதிக அக்கறையை செலுத்தி வருகிறது.. அந்தவகையில், விவசாயிகளின் உடனடி பண தேவைகளை பூர்த்தி செய்யவும், தனியார் கடனாளிகளிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலையைத் தவிர்க்கவும் கடன் வசதியையும் தந்து வருகிறது...

தமிழகத்தில் செயல்பட்டு வரும் முதன்மை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மத்திய மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகள் மூலமாக இந்த விவசாய நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுவாக நகைக்கடன் என்றால், வீட்டில் உள்ள தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெறுவது என மக்கள் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் இந்த நகைக்கடனில் சாதாரண நகைக்கடன் மற்றும் விவசாய நகைக்கடன் என இரண்டு வகைகள் உள்ளன...
விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்
சாதாரண நகைக்கடன் பெரும்பாலும் தனிப்பட்ட செலவுகள், மருத்துவம், கல்வி, திருமணம், சிறு தொழில் போன்ற தேவைகளுக்காக பெறப்படுகிறது. இதற்கான வட்டி விகிதம் சற்றே அதிகமாகவும், கடன் தொகைக்கு ஒரு வரம்பும் இருக்கிறது.
இதற்கு மாறாக, விவசாய நோக்கத்திற்காக வழங்கப்படும் நகைக்கடன் விவசாயிகளுக்கு பல சலுகைகளுடன் கிடைக்கிறது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது.
அதாவது கூட்டுறவு சங்கங்களில், குறிப்பாக முதன்மை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACCS) மூலம் விவசாயிகளுக்கு நகையை அடமானமாகக் கொண்டு இந்த விவசாய நகைக்கடன் வழங்கப்படுகிறது.
நகை கடன் முக்கியத்துவம்
இந்த கடன் விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த தேவைகளுக்காக வழங்கப்படுகிறது. பயிர் சாகுபடி காலத்தை கருத்தில் கொண்டு கடன் திருப்பிச் செலுத்தும் காலம் நிர்ணயிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு வசதி கிடைக்கிறது. தனியார் கடனாளிகளின் பிடியிலிருந்து விவசாயிகளை காக்கும் முக்கிய பங்கு கூட்டுறவு சங்கங்களின் விவசாய நகைக்கடன் வகிக்கிறது.
நகைக்கடன் வட்டி குறைவு
இந்த விவசாய நகைக்கடனின் முக்கிய ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? சாதாரண நகைக்கடனை விட குறைந்த வட்டி விகிதம் மற்றும் அதிக கடன் தொகை கிடைப்பதாகும். பொதுவாக இந்த கடனுக்கு சுமார் 7 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. சில கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் இதைவிட குறைந்த வட்டியிலும் கடன் வழங்குகின்றன.
மேலும், விவசாய நகைக்கடனில் திருப்பி செலுத்தும் காலம் பயிர் சாகுபடி சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. பயிர் விளைந்து வருமானம் கிடைத்த பிறகு கடனை திருப்பிச் செலுத்தும் வசதி இருப்பதால், விவசாயிகளுக்கு இது பெரும் நிம்மதியை அளிக்கிறது. விதை வாங்குதல், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்குதல், பயிர் பராமரிப்பு செலவுகள், கால்நடை பராமரிப்பு போன்ற விவசாய தேவைகளுக்காக இந்த கடன் பயன்படுத்தப்படுகிறது.
குத்தகை நிலம் பட்டா
இந்த கடனை பெற சில ஆவணங்கள் கட்டாயமாக தேவைப்படும்.. சொந்த நிலத்தில் விவசாயம் செய்பவர்கள் தங்கள் பெயரில் பட்டா ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். குத்தகை நிலத்தில் விவசாயம் செய்பவர்கள், உரிய குத்தகை ஒப்பந்த ஆவணத்தை வழங்க வேண்டும். இதனுடன் அடையாள ஆவணங்கள் மற்றும் நகை தொடர்பான விவரங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்...
மொத்தத்தில், குறைந்த வட்டி, அதிக கடன் தொகை, வசதியான திருப்பிச் செலுத்தும் காலம் ஆகிய காரணங்களால், கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் விவசாய நகைக்கடன் விவசாயிகளுக்கு நம்பிக்கையான பொருளாதார ஆதாரமாக விளங்கி வருகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications