தமிழகத்தில் வேகமாக குறையும் கொரோனா.. 12 நாளில் ஏற்பட்ட நல்ல மாற்றம்! இன்றைய நிலவரம்
சென்னை: ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று 25,317 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. 36 ஆயிரம் என்கிற நிலையில் இருந்து 25 ஆயிரம் என்கிற நிலையில் தமிழகம் எட்டியுள்ளது. இன்னமும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு உள்ளதால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு அதிக உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் நேற்றைவிட பாதிப்பு இன்று கணிசமாக குறைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு குறைந்துள்ளது. செங்கல்பட்டில் ஆயிரத்திற்கு கீழ் பாதிப்பு குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்பு
ஜூன் 2ம் தேதியான இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் 25,317 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,48,346 ஆக உயர்ந்துள்ளது.

குறையும் நோயாளிகள்
தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இன்று மட்டும் 32,263 பேர் மீண்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை இரண்டு அலையிலும் சேர்த்து மீண்டவர்களின் எண்ணிக்கை 18,34,439 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 2,88,702 ஆக குறைந்துள்ளது. முன்னதாக நேற்று இந்த எண்ணிக்கை 2,96,131 ஆக இருந்தது. ஒரே நாளில் இந்த எண்ணிக்கை சுமார் 8 ஆயிரம் அளவிற்கு குறைந்துள்ளது.

சென்னையில் அதிகம்
தொற்று குறைந்த போதிலும் உயிரிழப்பு குறையவில்லை. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 483 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக 77 பேர் பலியாகி உள்ளனர். கோவையில் 38 பேரும், செங்கல்பட்டில் 34 பேரும், வேலூரில் 29 பேரும், ராணிப்பேட்டையில் 24 பேரும், திருப்பூரில் 24 பேரும், ஈரோட்டில் 25 பேரும், காஞ்சிபுரத்தில் 22 பேரும் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.

கோவை முதலிடம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் மாவட்ட நிலவரத்தை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 3061 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவைக்கு அடுத்தபடியாக சென்னையில் 2217 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் ஈரோட்டில் 1488 பேருக்கும், திருப்பூரில் 1252 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் 1290 பேருக்கும், செங்கல்பட்டில் 996 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications