சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மே 10 முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம்.. முதல் தவணை ரூ 2000 விநியோகம்

Google Oneindia Tamil News

சென்னை: நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையில் முதல் தவணையாக ரூ 2000 வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துளளார்.

Recommended Video

    பதவியேற்றதும் 3 முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை.. Stalin எடுக்க போகும் நடவடிக்கை

    தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதல் கோப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்குதல் ஆகும்.

    லாக்டவுனில் 12 மணிக்கு மேல் ஆன்லைன் ஆர்டர்? - நெட்டிசன்களுக்கு தமிழக அரசு 'நச்' ரிப்ளை லாக்டவுனில் 12 மணிக்கு மேல் ஆன்லைன் ஆர்டர்? - நெட்டிசன்களுக்கு தமிழக அரசு 'நச்' ரிப்ளை

    முதல் தவணையாக ரூ 2000 வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் வரும் 10-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

    கொரோனா

    கொரோனா

    இந்த நிலையில் நாளை மறுநாள் முதல் அதாவது 10-ஆம் தேதி முதல் கொரோனா நிவாரண திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார்.

    நிவாரணத் தொகை

    நிவாரணத் தொகை

    முதல் தவணையாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ 2000 வழங்கப்படுகிறது. இதை உணவுத் துறை அமைச்சர் அர சக்கரபாணி அறிவித்தார். அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில் 10-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகையில் முதல் தவணையாக ரூ 2000 வழங்கப்படும்.

    ஊரடங்கு காலம்

    ஊரடங்கு காலம்

    கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்படும். ரேஷன் கடைகள் ஊரடங்கு காலத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்

    முதல் தவணை

    முதல் தவணை

    இந்த திட்டத்தால் 2.07 கோடி அரிசி அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 4,153 கோடி செலவிடப்படும். பயனாளிக்கு ரூ 2000 முறையாக போய் சேருகிறதா என்பது கண்காணிக்கும் பொறுப்பு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    டோக்கன்

    டோக்கன்

    நாளை மறுநாள் முதல் ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனில் குடும்பத் தலைவரின் பெயர், நியாய விலைக் கடையின் பெயர், தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போதைக்கு அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அமைச்சர் அர சக்கரபாணி தெரிவித்தார்.

    English summary
    Food Civil Supplies Minister Ara Sakkarapani says that first due Rs 2000 of corona relief fund scheme started from May 10.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X