சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிர்ச்சி: ராத்திரி வரை போனில் பேசிகொண்டிருந்த பிரதீபா.. மருத்துவ மாணவியின் மர்ம மரணம்.. என்ன காரணம்

மருத்துவ மாணவி பிரதீபா மர்ம மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வார்டில் பணியில் இருந்த பிரதீபா என்ற மருத்துவ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எதனால் இவர் இறந்தார் என்பது தெரியாத நிலையில், பிரதீபாவுக்கு கொரோனா இல்லை என்று கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை விளக்கியுள்ளது.

Recommended Video

    சென்னை மருத்துவ மாணவியின் மர்ம மரணம்.. என்ன காரணம்?

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதி வருடம் படிப்பவர் பிரதீபா... 22 வயதாகிறது.. இவர் சொந்த ஊர் வேலூர்... பெரம்பூரில் தங்கியிருந்து படித்து வந்தார்..தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களும் வைரஸ் தடுப்பு பணிக்கு தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    அதனால் அனைவருமே இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த மாணவர்கள் தங்கள் வீட்டுக்கு செல்லாமல் ஹாஸ்டலிலேயே தங்கியிருந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்றும் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது.

    பிரதீபா

    பிரதீபா

    அதன்படிதான் பிரதீபா ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா பிரிவில் பணி புரிந்து வந்தார்.. இவர் வீடு பெரம்பூரில் இருந்தாலும், அங்கு செல்ல அனுமதி இல்லாததால், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஹாஸ்டலிலேயே தனியாக ஒதுக்கப்பட்டிருந்த ரூமில் கடந்த 16-ம் தேதி முதல் தங்கியிருந்தார். இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக பிரதிபாவின் தோழி அவரது ரூம கதவை திறக்க முயன்றார்.

    ஹாஸ்டல் வார்டன்

    ஹாஸ்டல் வார்டன்

    ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருக்கவும், நீண்ட நேரமாக தட்டி பார்த்தார்.. பிறகு சந்தேகமடைந்து ஹாஸ்டல் வார்டன், மற்றும் வாட்ச்மேனிடம் விஷயத்தை சொல்லவும், அவர்கள் வந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.. பிரதீபா மயங்கிய நிலையில் அசைவற்று விழுந்து கிடந்தார்.. இதை பார்த்து பதறி போய், உடனடியாக ஆஸ்பத்திரிக்க தூக்கி சென்றால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதையடுத்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கதறி அழுதனர்

    கதறி அழுதனர்

    கொரோனா வார்டில் வேலை பார்த்த மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் காட்டுத் தீ போல பரவியது.. உடனடியாக பெற்றோருக்கு தகவல் தரப்பட்டது.. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த அவர்கள் மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்... சம்பவ இடத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விரைந்து வந்துவிட்டார்.. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வரும் அங்கே வந்து சேர்ந்தார்.. மாணவி மரணம் குறித்து இருவரும் விசாரித்தனர்.

    தீவிரம்

    தீவிரம்

    இது சம்பந்தமான விசாரணையை தீவிரப்படுத்தவும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டனர். போலீசார் பிரதீபாவின் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரியில் இருந்த மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்து, விசாரணையை மேற்கொண்டனர்.. பிரதீபா எந்த கடிதத்தையும் எழுதி வைக்கவில்லை.. அவர் தங்கியிருந்த ரூமில் எந்த தடயமும் கிடைக்கவில்லை.. அதனால் அவர் எதனால் இறந்தார் என்று உடனடியாக தெரியவில்லை.

    பெற்றோர்

    பெற்றோர்

    ஆனால், இறந்த பிரதீபாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது... அவரது சளி மாதிரியை பரிசோதித்ததில் தொற்று இல்லை என்று அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. நேற்றிரவுகூட பிரதீபா தன் பெற்றோரிடம் போனில் பேசினாராம்.. வேலைபளு அதிகமாக இருந்தாகவும் அவர்களிடம் சொல்லி உள்ளார்... அவரது செல்போன் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அகிலா

    அகிலா

    போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் பிரதீபா மரணத்துக்கு காரணம் தெரியவரும். இதனிடையே சிவகங்கை அருகே கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த பயிற்சி மருத்துவர் அகிலா என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார்.. அடுத்தடுத்து மருத்துவ மாணவிகளின் மரணம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

    English summary
    coronavirus: chennai kilpauk medical college student died and police inquiry is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X