சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒருமுறை வந்துவிட்டால் அவ்வளவுதான்.. கட்டுப்படுத்த முடியாது.. கொரோனா கம்யூனிட்டி பரவல் ஏன் ஆபத்தானது?

Google Oneindia Tamil News

சென்னை: ஒருமுறை கொரோனா வைரஸ் ஸ்டேஜ் 3 பரவலை எட்டிவிட்டால், அதை கட்டுப்படுத்துவது மிக மிக கடினம் ஆகும்.

Recommended Video

    கொரோனாவை அடுத்து சீனாவில் ஹண்டா வைரஸ்... உண்மை என்ன?

    கொரோனா வைரஸ் உலகம் முழுக்க இதுவரை 18,895 பேரை பலிகொண்டு இருக்கிறது. 422,629 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 108,879 பேர் இதில் இருந்து மீண்டும் வந்துள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒருவர் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனா காரணமாக தமிழகத்தில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா: ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ எட்டியது! கொரோனா: ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ எட்டியது!

    கொரோனா மூன்று வரை

    கொரோனா மூன்று வரை

    கொரோனா மொத்தம் மூன்று வகைகளில் பரவும். ஸ்டேஜ் 1 வகை பரவல், வெளிநாட்டில் இருந்து ஒருவர் இந்தியா வந்து , அவருக்கு கொரோனா இருந்தால் அது ஸ்டேஜ் 1 பரவல். அதேபோல் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த நபர் மூலம் அவரின் உறவினருக்கு கொரோனா ஏற்பட்டால் அது ஸ்டேஜ் 2 பரவல். இதை லோக்கல் டிரான்ஸ்மிஷன் பரவல் என்று கூறுவார்கள். இது கொஞ்சம் ஆபத்தானது .

    மிகவும் ஆபத்தானது

    மிகவும் ஆபத்தானது

    ஆனால் கம்யூனிட்டி பரவல் எனப்படும் ஸ்டேஜ் 3 மிகவும் ஆபத்தானது. ஸ்டேஜ் 3 என்பது வெளிநாடு செல்லாத, அல்லது வெளிநாடு சென்ற நபருடன் தொடர்பு கொள்ளாத ஒருவருக்கு கொரோனா ஏற்படுவது. உதாரணமாக 'ஏ' என்ற நபர் வெளிநாடு சென்று தமிழகம் வந்துள்ளார். 'ஏ' என்ற நபருக்கு கொரோனா உள்ளது. அவரின் உறவினர் ஒருவருக்கும் இவர் மூலம் கொரோனா பரவி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

    இதுதான் உதாரணம்

    இதுதான் உதாரணம்

    இப்பொது அந்த உறவினர் வெளியே செல்கிறார். அவர் சினிமா தியேட்டர் ஒன்றில் தனக்கு தெரியாத நபர் அருகே அமர்ந்து படம் பார்க்கிறார். இப்போது அந்த அருகில் இருக்கும் நபருக்கும் கொரோனா பரவி உள்ளது என்று வைத்துக் கொள்வோம். இதன் மூலம் 'ஏ' என்ற நபருக்கு கொஞ்சம் கூட தொடர்பு இல்லாத வேறு ஒரு நபருக்கு கொரோனா பரவி உள்ளது. இதுதான் கம்யூனிட்டி பரவல் அல்லது ஸ்டேஜ் 3.

    ஸ்டேஜ் 3 வந்தால்

    ஸ்டேஜ் 3 வந்தால்

    ஒருமுறை ஸ்டேஜ் 3 வந்துவிட்டால் அதை கட்டுப்படுத்த முடியாது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவில் ஸ்டேஜ் 3 வந்த பின்தான் அதை கட்டுப்டுத்த முடியாமல் போனது. ஆம் ஸ்டேஜ் 3யை கட்டுப்படுத்துவது என்பது மிக மிக கடினமான விஷயம். பொதுவாக ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் அவர் தொடர்பு கொண்ட நபர்களை எல்லாம் கண்டுபிடிப்பார்கள். அவர் யாரை எல்லாம் பார்த்தார் என்று கண்டுபிடித்து, அவர்களுக்கு கொரோனா உள்ளதா என்று சோதனை செய்வார்கள்.

    காண்டாக்ட் ட்ரெஸ் முறை எப்படி

    காண்டாக்ட் ட்ரெஸ் முறை எப்படி

    இதை காண்டாக்ட் ட்ரெஸ் முறை என்று கூறுவார்கள். இதன் மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். ஆனால், இந்த ஸ்டேஜ் 3 கொரோனா வந்துவிட்டால் காண்டாக்ட் ட்ரெஸ் முறை பயன் அளிக்காது. ஏனென்றால், நாம் மேலே பார்த்த உதாரணத்தில் ஏ என்று நபருக்கு கொரோனா இருந்தது. அவர் மூலம் அவர் தொடர்பு கொள்ளாத வேறு ஒரு நபருக்கு (தியேட்டரில் இருந்தவர்) கொரோனா பரவி உள்ளது. காண்டாக்ட் ட்ரெஸ் முறை மூலம் இவரை கண்டுபிடிப்பது மிக கடினம்.

    கொடுமையானது

    கொடுமையானது

    இதனால்தான் ஸ்டேஜ் 3 பரவல் மிகவும் கொடுமையானது என்று கூறுகிறார்கள்.இத்தாலி, ஸ்பெயின் இரண்டும் இங்குதான் தோல்வி அடைந்தது. தற்போது தமிழகத்தில் வெளிநாடு செல்லாமலே கொரோனா ஏற்பட்ட மதுரை நபர் பலியாகிவிட்டார். சைதாப்பேட்டையில் இன்னொரு நபருக்கும் இதேபோல் வெளிநாடு செல்லாமலே கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஸ்டேஜ் 3 ஏற்படுமா கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Coronavirus: Once stage 3 comes, then it is unstoppable, Here it is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X