சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்க வேண்டும்.. தமிழ்நாடு பார் கவுன்சில் கோரிக்கை !

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் 20 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு பொருளாதார வளர்ச்சி நிதி தொகுப்பில் இருந்து, வழக்கறிஞர்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி வழங்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    Nirmala sitharaman economic package | Concessional credits for farmers
    Coronavirus: PM Modi should help lawyer by giving Rs 1. lakh says TN Bar Council

    கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சரி செய்ய, 20 லட்சம் கோடி ரூபாய்க்கு சிறப்பு பொருளாதார நிதி தொகுப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

    இந்த நிதியத்தில் இருந்து, வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள், வீடியோ கான்பரன்சிங் வசதிகளை ஏற்படுத்த தலா ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கடிதம் அனுப்பியுள்ளார்.

    மிடில் கிளாஸ் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வீட்டு வசதி திட்டம் அடுத்த வருடம் வரை நீட்டிப்பு- நிர்மலாமிடில் கிளாஸ் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வீட்டு வசதி திட்டம் அடுத்த வருடம் வரை நீட்டிப்பு- நிர்மலா

    அதில், உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக, நீதிமன்றங்களில் முக்கியமான வழக்குகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கப்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.

    வீடியோ கான்பரன்சிங்-குக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த மூன்று ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் மாநில பார் கவுன்சில்களால் அடையாளம் காட்டப்படும் வழக்கறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் கடனுதவி வழங்க வேண்டும் என அந்த கடிதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.

    English summary
    Coronavirus: PM Modi should help lawyer by giving Rs 1. lakh says Tamilnadu Bar Council.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X