கடும் தட்டுப்பாடு... சென்னையில் தடுப்பூசி முகாம்கள் மீண்டும் நிறுத்தம் - மாநகராட்சி அறிவிப்பு
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று ஜூன் 30ஆம் தேதி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று ஜூன் 30ஆம் தேதி தடுப்பூசி முகாம்கள் நடைப்பெறாது எனவும், தடுப்பூசி வந்த பின் மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2 மாதமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி தனி கவனம் செலுத்தி வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஜூன் 28 ஆம் தேதி வரையிலும் 25,35,154 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் கடந்த 28ஆம் தேதி தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது.
சென்னை மட்டுமல்லாது கோவை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து முகாம்கள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமாக இருந்தாலும் தட்டுப்பாடு நிலவுவதாக கூறியுள்ளார் அமைச்சர் மா. சுப்ரமணியம்.
நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் மலைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்களும் தடுப்பூசி போட தயாராக உள்ள நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருவது வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியம்.
தமிழகத்திற்கு இதுவரை வந்த 1.44 கோடி தடுப்பூசி டோஸ்களில் 1.41 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 2 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு கூறினார் அமைச்சர் மா.சுப்ரமணியம்.
கடந்த 28ஆம் தேதி தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்றைய தினம் ஜூன் 30ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடைப்பெறாது எனவும், தடுப்பூசி வந்த பின் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications