இதையும் போட்டுடாதீங்க.. பேசிக்கொண்டு இருக்கும் போதே இருமிய விஜயபாஸ்கர்.. பேட்டியில் நடந்த சம்பவம்!
செய்தியாளர் சந்திப்பின் போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் என்று இருமியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
சென்னை: செய்தியாளர் சந்திப்பின் போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் என்று இருமியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
Recommended Video
இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மொத்தம் 194 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் 4 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் இந்த வைரஸால் 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் ஏற்கனவே குணப்படுத்தப்பட்டுவிட்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து அப்டேட் அளித்து வருகிறார்.

என்ன பேட்டி
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், கைகளை கிருமிநாசினிகள் கொண்டுதான் கழுவ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சுகாதார பணியாளர்கள், மருத்துவமனை சார்ந்த பணிகளை செய்யும் நபர்கள் இப்படி செய்தால் போதும். மற்றவர்கள் சோப்பு போட்டு சுத்தமாக அடிக்கடி கை கழுவினால் போதும். இந்த வைரஸ் குறித்து மக்கள் பயப்பட கூடாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 2% மட்டுமே இறப்புக்கு வாய்ப்பு. அதனால் பயப்பட வேண்டாம்.

இருமல்
இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். எல்லா காய்ச்சலும் கொரோனா காய்ச்சல் இல்லை; சளி , இருமல் வந்தாலே அது கொரோனா பாதிப்பு இல்லை; தேவையற்ற பயம் தேவையில்லை. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்கள் தொடர்பு கொண்ட எல்லோரையும் கண்காணித்து வருகிறோம்.

உடனே
வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களை உடனே கண்காணித்து வருகிறோம். இதில் அறிகுறி உள்ள நபர்களை உடனே ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம். அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் போய் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம். எல்லாம் சரியாக நடக்கிறது. அதனால்தான் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரிய அளவில் பரவவில்லை என்று விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.

வைரல்
விஜயபாஸ்கர் பேசிக்கொண்டு இருக்கும் போதே, திடீர் என்று ஒரு இடத்தில் இருமினார். இதனால் அங்கிருந்த செய்தியாளர்கள் எல்லோரும் ஒரு நிமிடம் திகைத்து போனார்கள். உடனே விஜயபாஸ்கர் சுதாரித்துக் கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை பார்த்து சிரித்துக் கொண்டே, இதையும் எழுதி விடாதீர்கள். இதையும் செய்தியாக போட்டு விடாதீர்கள் என்று மிகவும் கூலாக குறிப்பிட்டார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications