முதலமைச்சருக்கு புதிய அலுவலகம்.. தண்டச் செலவு! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் விமர்சனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் அலுவலகம் புனித ஜார்ஜ் கோட்டையின் முதன்மை கட்டிடத்திலிருந்து அதே வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த புதிய கட்டிடம் என்பது தண்ட செலவு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சுப்பராயன் விமர்சித்திருக்கிறார்.

"செலவுகளை குறைத்து வருவாய் அதிகரிக்க திட்டமிட வேண்டிய மாநில அரசு, அவசியமற்ற செலவுகளை அதிகரிப்பதிலா குதிரை வேகம் காட்டுவது? இடிப்பாரை இல்லாத மன்னனாகப் பயணிப்பது ஆபத்து! கடிவாளம் இல்லாத குதிரைப் பயணம் பாதுகாப்பற்றது!" என்று சுப்பராயன் கூறியிருக்கிறார். தவெக ஆட்சிக்கு ஆதரவளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்படி பேசியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

Vijay s New Office

புதிய கட்டிடம்

இந்த புதிய கட்டிடம் முதல்வர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அனைத்து முக்கிய அதிகாரிகளும் ஒரே தளத்தில் இயங்கும் வகையில் இந்த அலுவலகம் டிசைன் செய்யப்பட்டு வருகிறது. புதிய அலுவலகத்திற்கான பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 10வது தளத்திலிருந்த கூட்ட அரங்கம் அகற்றப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய முதல்வரின் அறை, பார்வையாளரின் அறை மற்றும் ஆலோசனை கூடம் உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல்வருடன் அவரது நான்கு செயலாளர்கள், சிறப்பு பணி அதிகாரிகள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகமும் இதே அலுவலகத்திற்கு மாற்றப்பட இருக்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் முதல்வர்கள், புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த பிரதான கட்டிடத்திலிருந்தே பணியாற்றி வந்தனர். இப்போது இடப்பற்றாக்குறை மற்றும் நிர்வாக காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

என்னதான் புதிய அறைக்கு முதல்வர் மாறினாலும் கூட, அவரது பழைய அறை முழுவதுமாக கைவிடப்படாது. முக்கிய அரசு நிகழ்ச்சிகள் மற்றும் குறிப்பிட்ட சந்திப்புகளுக்காக அது தொடர்ந்து பயன்படுத்தப்படும். ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் புதிய அலுவலகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி இருக்கையில்தான் இந்த புதிய அலுவலகம் என்பது தண்டச் செலவு என்று சிபிஐ எம்பி சுப்பராயன் விமர்சித்திருக்கிறார். தவெக அரசுக்கு ஆதரவளித்திருக்கும் சிபிஐ(CPI) இப்படி விமர்சித்திருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+