வலிமை: "அஜீத்” கட்அவுட்களுக்கு பால் திருட சான்ஸ்! முகவர்களை எச்சரிக்கும் “சங்க தலைவர்” பொன்னுசாமி!
சென்னை : நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அஜித் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக பால் பாக்கெட்டுகளை திருட வாய்ப்பிருப்பதால் பால் முகவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் வருகிற 24 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. வலிமை திரைப்படத்திற்கான முதல் நாள் காட்சிகளின் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்ட நிலையில், வலிமை திரைப்படத்தை வரவேற்று பல விதமான போஸ்டர்களை அவரது ரசிகர்கள் ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அஜித் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக பால் பாக்கெட்டுகளை திருடலாம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி அறிவுறுத்தியுள்ளார்.

பால் அபிஷேகம்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பிற்கினிய பால் முகவர்களே வணக்கம். முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அத்திரைப்படம் வெளியாகின்ற திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் "முன்னணி நடிகர்களின் உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம்" செய்கிறோம் என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் வீணாக்குவதையே வாடிக்கையாக கொண்டிருப்பதை நாம் அனைவருமே நன்கறிவோம்.

நடிகர்கள் தடுக்க வேண்டும்
உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுக்க வேண்டும், "ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்" என்கிற முயற்சியில் கடந்த 2016ம் ஆண்டு முதல் மதிப்பிற்குரிய நடிகர்கள் திரு. ரஜினிகாந்த், திரு. விஜய், திரு. அஜீத், திரு. சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் கவனத்திற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை பதிவு தபால் மூலமாக கொண்டு சென்றதோடு, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கும் கூட கொண்டு சென்றிருக்கிறோம்.

வேதனைக்குரிய விஷயம்
அதுமட்டுமின்றி "உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்" என சென்னை பெருநகர காவல் ஆணையரிடமும், காவல்துறை தலைவரிடமும் கடந்த காலங்களில் பலமுறை புகார் மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை நம்முடைய கோரிக்கைகள் எவர் காதிலும் விழுந்ததாக தெரியவில்லை. அத்துடன் "ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த மேற்கண்ட முன்னணி நடிகர்கள் எவரும் துளியளவு முயற்சிகளைக் கூட மேற்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரிய விசயமாகும்.

வலிமை திரைப்படம்
இந்த நிலையில் வருகின்ற 24.02.2022 வியாழக்கிழமை அன்று முன்னணி நடிகரான திரு. அஜித் அவர்களின் நடிப்பில் "வலிமை" திரைப்படம் வெளியாக இருக்கிறது. அந்த படம் வெளியாகும் திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் அவரது கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக ஒரு சில ரசிகர்களும், ரசிகர்கள் எனும் போர்வையில் உள்ள சமூக விரோதிகளும் நள்ளிரவிலோ அல்லது அதிகாலை நேரத்திலோ பால் முகவர்களின் கடைகளில் இருந்து பாலினை திருடலாம் என்கிற அச்சம் கலந்த சந்தேகம் ஏற்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் கண்ணயர்ந்து உறங்கும் நேரத்தில் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களாகிய நாம் அனைவரும் நித்தமும் கண்விழித்து தங்குதடையற்ற சேவையை வழங்குவதாக பணி அமைந்திருப்பதால் இது போன்ற நேரங்களில் நாம் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

பால் முகவர்கள் கவனம்
எனவே நாளை (24.02.2022) முதல் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு தினந்தோறும் நள்ளிரவு தொடங்கி காலை 6.00மணி வரை தமிழகம் முழுவதும் அந்தந்தப் பகுதியில் உள்ள பால் முகவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சுழற்சி முறையில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நமது வாழ்வாதாரத்தை தற்காத்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம். மேலும் ரசிகர்கள் எனும் பெயரில் "சமூக விரோதிகள்" எவரேனும் பாலினை திருட முயற்சி செய்தால் இரவு பாதுகாப்பு பணியில் இருக்கும் பால் முகவர்கள் அவர்களை பிடித்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைப்பதோடு அதனை புகாராக பதிவு செய்து அதற்கான உரிய ரசீது (CSR COPY) பெற்று கொண்டு உடனடியாக நமது சங்கத்தின் தலைமைக்கு தகவல் கொடுக்க வேண்டுகிறோம். நமக்கு இழப்பு ஏற்பட்ட பிறகு வருந்துவதை விட, இழப்பு ஏற்படும் முன் தற்காத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. ஒன்றுபடுவோம்..! வென்று காட்டுவோம்...!!" என கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications