சென்னையை உலுக்கிய இரட்டை கொலை.. தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை.. தந்தை பிறழ்சாட்சி
சென்னை: சென்னையை உலுக்கிய கொலை குற்றவாளியான தஷ்வந்த் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தாயை கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. ஆனால் தஷ்வந்த் ஏற்கனவே சிறுமியின் பலாத்காரம், கொலை வழக்கில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது
கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி சென்னை மாங்காடு அருகே சிறுமி ஒருவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் தஷ்வந்த் கடத்தி பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்தார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த கொலை வழக்கு நாட்டையே உலுக்கிய கொலை ஆகும்.
கொலை சம்பவம்
கொலை செய்துவிட்டு.. அந்த சிறுமியின் உள்ளாடைகளை தனது அறையில் அவர் ஒளித்து வைத்து இருந்ததும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் போலீசாரின் தீவிர விசாரணை, சிசிடிவி காட்சிகள், பக்கத்து வீட்டினர் தந்த வாக்குமூலங்கள் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால் நீதிமன்ற விசாரணையில் தஷ்வந்துக்கு உடனே ஜாமீன் கிடைத்தது. குண்டர் சட்டத்தில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். வெளியே வந்தவர்.. உடனே தனது தாயை கொன்றுவிட்டு தப்பி ஓடினார். இவர் ஜாமீனில் வந்ததை அப்போது தஷ்வந்த் அப்பா கொண்டாடி இருந்தார்.
ஆனால் அவர் கொண்டாட்டம் அடங்கும் முன் அவரின் மனைவியை கொன்றுவிட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை தஷ்வந்த் எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார். அவரது தாயை கொன்ற வழக்கில் மும்பை தப்பி ஓடிய அவரை போலீஸார் கடந்த 2018 டிசம்பர் 6-ஆம் தேதி கைது செய்தனர். அங்கேயும் இவர் போலீசை தாக்கிவிட்டு லாட்ஜில் இருந்து தப்பிக்க முயன்றார். இதன் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தூக்கு தண்டனை நிறுத்தி வாய்ப்பு
இவர் மீது சிறுமி கொலை, பெற்ற தாய் கொலை என்ற இரண்டு கொலை வழக்குகள் உள்ளன. இதில் 2018ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தஷ்வந்துக்கு 2018ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படவில்லை.
இரண்டவதாக ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் இவரை தற்போது விடுதலை செய்துள்ளது செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம். இவரின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார். அதாவது முதலில் இவரின் தந்தை இந்த வழக்கில் மகனுக்கு எதிராக சாட்சி வழங்கிய நிலையில் அவரே தற்போது தனது மனைவி கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறி மகனை காப்பாற்றி உள்ளார்.
இதனால் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் தஷ்வந்த் ஏற்கனவே சிறுமியின் பலாத்காரம், கொலை வழக்கில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சை அருகே ஷாக்.. கணவர் - சொந்த அக்காவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. சிக்கிய மனைவி அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications