ஒரு மந்தையில் பிரிந்த ஆடுகள்.. சந்திக்கும் போது பேச முடியலையே! கமலுக்கு இப்படி ஒரு தர்மசங்கடமா பாஸ்
சென்னை: திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா இடம் ஒதுக்கப்பட்டு இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது... பெரும்பாலும் கமல்ஹாசன்தான் அந்த எம்பி பதவியை பெறுவார் என்ற விஷயமும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது... அத்தை மக வந்துட்டா போதும் சின்ராசை கையிலேயே பிடிக்க முடியாது என்பது போல எம்பி சீட் கிடைத்த சந்தோசத்தில் இருக்கும் கமலையும்.. அவரின் முடிவையும் நெட்டிசன்கள் விடாமல் கலாய்த்துக்கொண்டு இருக்கின்றனர். அப்படி என்னதான் ஆச்சு?
இன்ஸ்ட்டா தொடங்கி யூ டியூப் வரை இப்போது டிரெண்டிங்கில் இருக்கும் டாப் பாடல் என்றால்.. அது "கட்சி சேர" பாடல்தான். கையை தூக்கி.. கலர் கலராக அந்த பொண்ணு போட்ட ஆட்டத்தை 2கே கிட்ஸ் எப்படி பார்த்தார்களோ தெரியவில்லை.. கமல் அந்த "கட்சி சேர" பாடலை ரொம்ம்ம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டார் போல. பாருங்க இப்போது திமுக "கட்சியின் கூட்டணியில் சேர்ந்து" விட்டார்.

ஒரு காலத்தில் கட்சி தொடங்கிய போது.. திமுகவை விமர்சிக்க "ரிமோட்டை" எல்லாம் தூங்கி எறிந்தவர் நாங்க லெப்டும் இல்லை.. ரைட்டும் இல்லை.. மய்யம்.. அதாங்க "நடு -சென்டர்" என்றுவிட்டு அரசியலுக்கு வந்தவர்.. இப்போது வலதுசாரியை எதிர்க்க லெப்ட் இண்டிகேட்டர் போட்டு திரும்பி அறிவாலயம் ஆபிஸ் சென்று கூட்டணியில் அங்கமாகிவிட்டார். அரசியலில் இதெல்லாம் உண்மையில் சாதாரணம்தான் போல.
( ராஜ்ய சபா மட்டுமல்ல.. மத்திய அமைச்சராக பிளான் போட்ட கமல்.. ஒரே கல்லில் 2 மாங்காய்.. அடிதூள்! )
"மஞ்சும்மேல் பாய்ஸ்" தமிழ்நாட்டில் இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறதோ இல்லையோ.. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் இல்லை என்று கூறி திமுகவுடன் கூட்டணியில் ஐக்கியம் ஆகி.. கமல் "அறிவாலயம் பாய்ஸ்" ஆன கதைதான் இப்போது அரசியல் உலகில் டாப் டிரெண்டிங்கில் போய்கொண்டு இருக்கிறது...

சரி அதெல்லாம் இருக்கட்டும்.. கமலுக்கு தர்மசங்கடம்னு தலைப்பில் போட்டு இருக்கீங்களே அது என்ன பாஸ்னு கேட்கிறீங்களா.. மேட்டருக்கு வருவோம்.
மந்தையில் பிரிந்த ஆடுகள்: கமல் கட்சி ஆரம்பித்த தொடக்கத்தில் அவரின் கட்சியில்.. அவருடன் நெருக்கமாக இருந்த சிலரில் டாக்டர் மகேந்திரனும் ஒருவர்.. ஆனால் திடீரென கமலுக்கே ஷாக் கொடுத்து சட்டசபை தேர்தலுக்கு பின் அவர் திமுகவில் சேர்ந்துவிட்டார். மநீமவில் இருந்த "இன்ஸ்ட்டா" புகழ் பத்மப்ரியாவும் அப்படியே போய் திமுகவில் ஐக்கியம் ஆகிவிட்டார். அடுத்தடுத்து பலர் வெளியேற கட்சியும்.. காப்பாற்ற ஆள் இல்லாமல் தொங்கிக்கொண்டு இருக்க.. கமலோ "வரட்டாம் மாமே டுர்ர்ர்" என்று பிக்பாஸ் 7 ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார்.

அங்கே ஏகப்பட்ட குறும்படங்களை போட்டவர்.. அதன்பின் Thug life என்ற பெரும்படத்திலும் சைன் போட.. சரி இடையில் கொஞ்சம் அரசியலையும் கவனிப்போம் என்று திமுக கூட்டணியிலும் நேற்று சைன் போட்டுள்ளார்.
( திமுகவிடம் சீப்பாக விலை போன கமல்.. கிண்டல் செய்த கஸ்தூரி )
என்னவொன்று அப்போது கமலை "பிரேக் அப்" செய்துவிட்டு பிரிந்து போன மகேந்திரனும், பத்மப்ரியாவும் இப்போது இருப்பதே அந்த திமுக கட்சியில்தான். ஒரு கவுண்டமணி காமெடியில்.. செந்திலிடம் கவுண்டமணி கடன் கேட்க போக.. பேக் கிரவுண்டில் "நீயா.. நீங்களா" என்று மாறி மாறி குரல் கேட்குமே.. அப்படித்தான் மகேந்திரனும் கமலும் சந்திக்கும் போது நடக்க போகிறது. ஒரு மந்தையில் பிரிந்த இரண்டு ஆடுகள்.. சந்திக்கும் போது பேச முடியவில்லையே என்று வடிவேலு அப்போது சொல்வது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலை இப்போது கமலுக்கு.

கப்பலில் வேலைக்கு போறேன்னு சொல்லிவிட்டு மீண்டும் பழைய வேலைக்கு போன போன கவுண்டமணி நிலைதான் மகேந்திரனுக்கும், பத்மப்ரியாவிற்கும். கமல் - மகேந்திரன் ரெண்டு பேரும் சந்திக்கும் போது கண்டிப்பாக.. "யோவ் மிலிட்டரி நீ எங்கயோ இங்கே" என்ற மைண்ட் வாய்ஸ்தான் பின்பக்கம் ஓடும்.
தஹ் லைப்: என்னதான் இதில் பல தர்மசங்கடங்கள் இருந்தாலும்.. திமுக கூட்டணி ஜெயிக்குதோ இல்லையோ கமலுக்கு "ஒரு எம்பி சீட் பார்சல்" என்பதால்.. அவருடைய அரசியல் வாழ்க்கை அடுத்த 6 வருஷத்திற்கு "உண்மையில்" Thug lifeதான்.

என்ன பாஸ்.. ஆர்டிக்கள் முழுக்க சினிமா ரெபரென்ஸா இருக்கே.. அரசியலே காணோம்னு நினைக்குறீங்களா.. எதிர்காலத்தில் ஒரே மேடையில் உதயநிதி, கமல் பிரச்சாரம் பண்றப்போ.. பின்னாடியே.. தமிழக முன்னேற்றக் கழகத்திற்கு விஜயும் பிரச்சாரம் பண்ணிட்டு வரப்போ உங்களுக்கே புரியும்.. என்னப்பா எல்லாரும் சினிமா ஆட்களா இருக்காங்க அரசியல்வாதிகளையே காணோம்னு.. அப்போ இந்த ஆர்டிக்களை நினைச்சு பார்ப்பீங்க!

சரி அதெல்லாம் இருக்கட்டும்.. லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது விக்ரம் தொடங்கி மஞ்சமேல் பாய்ஸ் வரை.. கமல் இருக்குற இடமெல்லாம் ஹிட் ஆகுதே என்று திமுக எண்ணியதோ என்னவோ .. மகேந்திரன் முதல் பத்மப்ரியா வரை பலரை தங்கள் பக்கம் இழுத்த திமுக.. இப்போது கமலையும் தங்கள் கூட்டணிக்குள் இழுத்துக்கொண்டுவிட்டது. இந்த தேர்தல் கூட்டணி "குணா குகை" போல ஹிட் அடிக்குமா.. இல்லை "குணா படம்" போல பிளாப் அடிக்குமா என்பதை தேர்தல் முடிந்தபின் "டார்ச்" அடித்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications