மூன்றாவது அலைக்கு காரணமாகும் டெல்டா பிளஸ்...எதிர்கொள்ளத் தயார் என்கிறார் மா.சுப்ரமணியன்
தமிழகத்தில் 3 பேருக்கு புதிய உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: டெல்டா பிளஸ் வைரஸ் பாதிக்கப்பட்ட செவிலியர் குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தற்போது உள்ள தடுப்பூசியே டெல்டா பிளஸ் வைரஸை கட்டுக்குள் வைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்டா பிளஸ் வகை வைரஸ்தான் மூன்றாவது அலையாக உருவாகும் என கூறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் 3 பேருக்கு புதிய உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் கொரோனா பாதித்தவர்கள் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டதால் அப்பகுதியை கட்டுப்படுத்தும் பகுதியாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும், மேலும் இவ்வைரஸ் குறித்து ஆய்வு செய்ய ஏதுவாக 25 நாட்களுக்குள் சென்னையில் பரிசோதனை மையம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

டெல்டா பிளஸ் வைரஸ் வீரியமிக்கது. வேகமாகப் பரவக்கூடியது. என்றாலும் கூட, தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல், பாதிக்கப்பட்ட செவிலியருக்கு எப்போதும் அளிக்கக்கூடிய கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு, இப்போது அவர் நலமுடன் இருக்கிறார். அவர் குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தற்போது உள்ள தடுப்பூசியே டெல்டா பிளஸ் வைரஸை கட்டுக்குள் வைத்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்டா பிளஸ் பாதித்தவருடன் தொடர்பிலிருந்த வரும் நலமாக இருக்கிறார். அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர், உறவினர்களை மருத்துவத்துறை கண்காணித்து வருகிறது.
இந்த டெல்டா பிளஸ் வைரஸ் இரண்டாவது அலையிலேயே ஏராளமானோருக்கு வந்துபோயிருக்குமோ என்ற சந்தேகமும் உள்ளது. இதன் பாதிப்பு பெரிதாக இல்லை. இந்த தொற்று வந்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதித்ததில் அவர்களுக்கு இந்த தொற்று பரவவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள டெல்டா பிளஸ் வைரஸ் முடிவுகள் மே மாதத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட பகுப்பாய்வின் முடிவுகள்படி 9 பேரின் வீடுகள் மற்றும் வசிக்கும் பகுதிகள் தொடர்புகளை சோதனை செய்யப்பட்டது என்றும் கூறினார்.
டெல்டா பிளஸ் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று கூறிய அமைச்சர், ஆனால் இந்து வகை வைரஸ்தான் மூன்றாவது அலையாக உருவாகும் என கூறப்படுகிறது என்றும் தெரிவித்தார். மூன்றாவது அலைக்கு தயாராகும் விதமாக 2வது அலையில் உருவாக்கப்பட்ட படுக்கைகள் கட்டமைப்பு அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து செயல்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
உருமாற்றமடையும் வைரஸ்கள் குறித்து கண்டறிய சென்னையில் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்றும், கொரோனா உச்சம் குறைந்துள்ள நிலையில் பொது நோய்களுக்கு முக்கியத்துவம் அளிக்க அரசு மருத்துவமனைகளில் கவனம் செலுத்த மருத்துவமனை முதல்வர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
டெல்டா பிளஸ் பெரிய அளவில் பரவவில்லை என்றாலும், இதற்கான பரிசோதனை மையம் சென்னையிலேயே அமைக்க முடிவு செய்யப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும், 25 நாட்களுக்குள் பரிசோதனை மையம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
டெல்டா பிளஸ் தொற்று பாதித்தவர்கள் சகஜ நிலைக்கு திரும்பி விட்டனர். மீண்டும் யாருக்கேனும் தொற்று உறுதி செய்யப்பட்டால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications