விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை.. தமிழ்நாடு மருத்துவ துறையில் புதிய உச்சம்
சென்னை: கல்வி சேவையை தொடர்ந்து 21 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்குவதில் தனக்கென ஓர் சிறந்த இடத்தினை பிடித்து இத்துறையில் மணிமகுடமாக செயலாற்றி வரும் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை, சென்னை பையனூரில் உள்ள ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்திலுள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை ஆகியவற்றின் சிறப்பம்சங்கள் குறித்து துறையின் டீன் பேராசியர் டாக்டர். செந்தில்குமார் கூறியதாவது:-
மருத்துவ துறையை தங்களின் கனவாக கொண்டு காத்திருக்கும் மாணவர்களுக்கு அவர்களின் கனவினை நிறைவேற்றி சிறந்த வேலை வாய்ப்பினை வழங்கும் மருத்துவ துறை சார்ந்த படிப்புகளை, தகுதிமிக்க பேராசிரியர்களை கொண்டு சிறந்த முறையில் வழங்கி வருகிறோம். அதற்கு சான்றாக தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில்(NAAC) மூலம் நடத்தப்பட்டதில் 'ஏ' தரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப் பட்ட தெற்கு ஆசியாவின் TUV- SUD அமைப்பானது எங்களின் கல்வி தரத்தினை ஆராய்ந்து சர்வதேச தரநிலை (ISO21001:2018) சான்றிதழினையும் வழங்கி அங்கீகரித்துள்ளது.

இந்தியாவில் இந்த சான்றிதளை பெற்ற முதல் கல்லூரி எங்களுடையதே. எங்கள் கல்லுலூரியில் மயக்க மருந்தியியல்,இருதய பரிசோதனை பிரிவு, மருத்துவ ஆய்வக பிரிவு, கண் ஒளியியல் பிரிவு, அறுவை சிகிச்சை உதவியாளர் பிரிவு,நரம்பியல் பிரிவு,கதிரியக்க பிரிவு மருத்துவ உதவியாளர் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, தடய அறிவியல் பிரிவு போன்ற 14 இளங்கலை படிப்புகளும் இதனை சார்ந்த முதுகலை படிப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த உள்கட்டமைப்பு வசதி. டிஜிட்டல் தொழிற்நுட்பம் சார்ந்த நூலகம் மற்றும் தொழிற்துறையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் துறை ரீதியான கூடுதல் சான்றிதழ் படிப்புகள், வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் எளிதாக வேலைவாய்ப்பினை பெற பன்மொழி திறன் (ஹிந்தி, ஆங்கிலம், ஜெர்மன், ஜாப்பனீஸ்) பயிற்சி,ஆய்வக வசதிகள், அரசு சார்ந்த கூடுதல் சான்றிதழ் படிப்புகள் (SWAYAM) போன்ற எண்ணற்ற கல்வியியல் சார்ந்த வழிவகைகளை ஏற்படுத்தி சிறந்த முறையில் வழங்கி வருகிறோம்.

கல்வி சார்ந்த திறன்களை மட்டும் வழங்காமல் மாணவர்களின் தனி திறனை ஊக்குவித்து முறையாக வழி நடத்தி அதிலும் சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் விளையாட்டு திறன் சார்ந்த பயிற்சியும் ,கலை சார்ந்த பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நம் தமிழர்களின் கலையான நாட்டுப்புற கலை பயிற்சி,இசை, ஓவியம் போன்றவற்றை வழங்கி வருகிறோம். இதில் பயிற்சி பெற்ற மாணவ,மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடமும் மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று தங்களின் தனி திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் வருமானத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு அன்னபூரணி கல்வி ஊக்கத்தொகை, சண்முகசுந்தரம் கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. மாணவர்கள் பயிலும் காலங்களிலேயே, மருத்துவ துறை சார்ந்த பயிற்சியினை வழங்குவதோடு அவர்களுக்கான தொகுப்பு ஊதியம்(Stipend) பெறுவதற்கும் வழிவகை செய்துள்ளோம். நமது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவிகளுக்கான ஊக்கத்தொகையும் மாதம் தோறும் வழங்கப்படுகிறது.
கல்லூரியின் வேலைவாய்ப்பு அமைப்பின் மூலம் ஆண்டு தோறும் வளாகத்தேர்வு(Placement drives) நடத்தப்பட்டு, பன்னாட்டு மருத்துவமனைகள், மருத்துவ துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். மருத்துவ துறை சார்ந்த பயிற்சிக்காக இந்தியாவிலுள்ள பல்வேறு சிறந்த மருத்துவமனைகளுடன் சேர்ந்து பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.

சமூகம் சார்ந்த விழிப்புணர்வையும் சேர்த்து அளிக்கும் வண்ணம் மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் நாட்டு நல பணித்திட்டம். இளைஞர் நல அமைப்பு, சுற்றுச்சூழல் அமைப்பு. ரோட்டரி அமைப்பு, சாலை பாதுகாப்பு அமைப்பு போன்றவற்றில் ஈடுபடுத்தி பல்வேறு சமுக நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இதன் மூலம் எங்கள் துறையை சேர்ந்த , மாணவர்கள் தமிழக அரசின் மாநில அளவிலான பயிற்சிகளில் பங்கேற்று சான்றிதழினை பெற்றுள்ளனர். இச்சான்றிதழானது , அவர்களின் அரசாங்க வேலைவாய்ப்பிற்கு உறுதுணையாக இருக்கும். மேலும் எங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ நல உதவிகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர்களையும் கருத்தில் கொண்டு இலவச மருத்துவ காப்பீட்டினை வழங்கி வருகிறோம்"என்றார்.
வருங்கால வளர்ச்சிக்கும் தொழிற்துறை சார்ந்த வளர்ச்சி மற்றும் எதிர்பார்ப்புகளை ஈடுசெய்யும் வகையில் பல்வேறு கருத்தரங்குகள். மாநாடுகள் கல்வி சுற்றுலா மூலம் திறன் மேம்பாடு அடைந்து எங்கள் மாணவர்கள் உலக அளவில் சிறப்பாக செயல் படுவார்கள் என்பதில் உறுதியாக உள்ளோம்.
இத்தகைய சிறப்புகளுக்கு அடையாளமான அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது 50க்கும் மேற்பட்ட விருதுகளை சர்வதேச மற்றும் தேசிய அளவிலான இயக்கங்கள் மூலமாகவும்,அரசனிடம் இருந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
For admissions Contact Toll Free number - 18003093332
-
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications