Dhanush: தனுஷின் அரசியல் பிரவேசத்திற்கான அடுத்த மூவ்? நற்பணி இயக்கமாக மாறிய ரசிகர் மன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் நற்பணி மன்றம், "தனுஷ் நற்பணி இயக்கம்" என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கான புதிய இலச்சினையும் வெளியிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவையில் நடந்த தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் நடிகர் தனுஷ் கட்சி பெயரை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே "தமிழக எழுச்சிக் கழகம்" என்ற பெயரில் தனுஷ் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் பரவியது.

Dhanush transforms fan club into welfare movement next step towards political entry

தனுஷ் ரசிகர் நற்பணி இயக்கம்

நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். விஜய் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றதை அடுத்து இவரும் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக சமீப நாட்களாகவே தகவல் பரவி வருகிறது. அதற்கு ஏற்ப நடிகர் தனுஷும் அடிக்கடி ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி வருகிறார்.

சமீபத்தில் தனது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றது. தனுஷ் அரசியலில் களமிறங்குவதற்கான திட்டத்துடன் தான் காய்களை நகர்த்துவதாக பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் தனுஷ் ரசிகர் நற்பணி இயக்கம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவையில் மாநில நிர்வாகிகள் கூட்டம்

கோவையில் இன்று தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தான், நற்பணி மன்றம், 'தனுஷ் ரசிகர் நற்பணி இயக்கம்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடந்த கூட்டத்தில் தமிழகம் முழுக்க உள்ள நிர்வாகிகள் கலந்துகொண்டதாகவும், குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள தனுஷ் ஆதரவாளர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மன்றத்தின் பெயர் மாற்றப்பட்டதுடன் நற்பணி இயக்கத்துக்கான புதிய இலச்சினையும் வெளியிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இலச்சினை தான் தனுஷ், தொடங்க இருக்கும் கட்சிக்கான கொடியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

"தமிழக எழுச்சிக் கழகம்" கட்சியா?

ஏற்கனவே தனுஷ் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருந்தன. "தமிழக எழுச்சிக் கழகம்" என்ற பெயரில் தனுஷ் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் பரவியது. ஆனால் இது பற்றி தனுஷ் தரப்பிடம் கேட்ட போது இதனை மறுத்தாலும், தனுஷ் கட்சி தொடங்குவது உறுதிதான் என்று தெரிவித்தனர்.

தனுஷ் கட்சி பெயரை இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும்" என கூறியிருந்தனர். மேலும் சிலர் கூடிய விரைவில் தனுஷ் தனது கட்சி பெயரை அறிவிப்பார் என்றும் சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+