"சம்பவம்" செய்த ராகுல் காந்தி.. எடப்பாடிக்கே போனை போட்டு.. கசிந்த "சீக்ரெட்" டீல்.. பதறி ஓடிய பாஜக?
சென்னை: அதிமுகவில் பொதுக்குழுவில் நேற்று மோதல்கள் நடந்த நிலையில்.. நேற்று பிற்பகலில் எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லியில் இருந்து முக்கியமான போன் கால் ஒன்று சென்றுள்ளது. டெல்லியில் இருந்து எடப்பாடிக்கு போன் செய்த அந்த நபர் ராகுல் காந்தி என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர்.. அப்படி என்ன நடந்தது?
அமலாக்கத்துறை விசாரணை வளையம், அம்மா சோனியாவின் உடல் நிலை என்று பல விஷயங்களுக்கு இடையில் எடப்பாடிக்கு ராகுல் காந்தி ஏன் போன் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுந்த நிலையில் அதிமுக வட்டாரத்தில் இதை பற்றி விசாரித்தோம்.
அதன்படி.. அதிமுக பொதுக்குழுவில் நேற்று மோதல்கள் நடந்த உடன் முதல் ஆளாக ஓ பன்னீர்செல்வம் வெளியேறினார்.

எடப்பாடி
அதன்பின் தன்னுடைய பவரை காட்டிய மகிழ்ச்சியில்.. முழு மனநிறைவோடு எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்று இருக்கிறார். அவருடன் நிர்வாகிகள் பலரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். இப்படி எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு செல்லும் வழியில்தான் டெல்லியில் இருந்து ராகுல் காந்தி தரப்பு போன் செய்து இருக்கிறது. ஆனால் இவர் அதிமுக விவகாரங்களை பற்றி பேசவில்லை. அதிமுக விவகாரங்களில் காங்கிரஸ் தலையிட வேண்டிய காரணமும், அவசியமும் இல்லை என்பதால் அவர் எதுவும் பேசவில்லை.

என்ன நடந்தது?
மாறாக.. குடியரசுத் தலைவர் தேர்தலிலும் என்ன முடிவு எடுக்க போகிறீர்கள் என்று எடப்பாடியிடம் ராகுல் கேட்டு இருக்கிறார். ஜெயலலிதா எல்லா சமயங்களிலும் பாஜகவை ஆதரித்தது இல்லை. அதிகாரபூர்வமாக நீங்கள் இப்போது பாஜக கூட்டணியில் இல்லை. அதனால் எதிர்க்கட்சி வேட்பளாரை நீங்கள் ஆதரிக்க வேண்டும். யஷ்வந்த் சின்காவை நீங்கள் ஆதரித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருக்கிறாராம் ராகுல் காந்தி.

ஏன் பேசினார்?
இருவருக்கும் இடையில் இந்த தொடர்பை ஏற்படுத்தி தந்தவர் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில். சுனில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கம் ஆனவர். இப்போது காங்கிரஸ் வியூகங்களை அவர்தான் தமிழ்நாட்டில் வகுக்க உள்ளார். முன்னதாக கடந்த தேர்தலில் அவர் அதிமுகவிற்கு தேர்தல் பணிகளை செய்தார். இந்த நிலையில்தான்.. ராகுலிடம் எடப்பாடி குறித்த ஆளுமைகளை சுனில் விவரித்துள்ளார். இதன் பின்பே ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஸ்வந்த் சின்ஹாவிற்காக வாக்களிக்க எடப்பாடியிடம் கேன்வாஸ் செய்தார் ராகுல்.
Recommended Video

இதுதான் காரணம்
அந்த கேன்வாஸிற்காகத் தான் ராகுல் பேசினார் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில்.ராகுல் - எடப்பாடி பேசியது பிரதமர் மோடியின் கவனத்துக்கு உடனே கொண்டு செல்லப்பட்டுள்ளதாம். இதன் காரணமாகவே பாஜக தரப்பு நேற்று பதறியடித்துக்கொண்டே எடப்பாடி வீட்டிற்கு சென்றுள்ளதாம். அண்ணாமலை, சிடி ரவி ஆகியோர் இதனால்தான் வேக வேகமாக எடப்பாடி வீட்டிற்கு சென்றுள்ளனர். எதிர்க்கட்சி வேட்பளார்களுக்கு ஆதரவு தர வேண்டாம்.. பாஜகவை ஆதரியுங்கள் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்செட்
இந்த போன் கால் காரணமாக எடப்பாடி மீது பாஜக கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறதாம். இந்த நிலையில் தான் ஓபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் மனு தாக்கல் நிகழ்வில் கலந்துகொள்ள டெல்லி செல்வதாக ஓபிஎஸ் சொல்லியிருந்தாலும், ராகுல்-எடப்பாடியின் புதிய தொடர்புதான் டெல்லியை கோபப்படுத்தியதாகவும் அதன் பின்னணியிலேயே ஓபிஎஸ்சை டெல்லிக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் அரசியல் மேலிட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டெல்லி பயணத்தில் ஓபிஎஸ்ஸுக்கு சில சாதகமான சூழ்நிலைகள் உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர்!












Click it and Unblock the Notifications