ஒன்னு விடாம கசியவிட்ட "மூத்த" புள்ளி! எடப்பாடி திட்டியதை.. லைவ் ரிலேவில் பார்த்த சசிகலா! என்னாச்சு?
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் நடந்த விஷயங்களை சசிகலா நேற்று தொலைக்காட்சியில் தீவிரமாக பார்த்து இருக்கிறார். அதோடு அவருக்கு உள்ளே இருந்து பல முக்கிய தகவல்களும் உடனுக்குடன் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அதிமுக பொதுக்குழு நேற்று சில சுனாமிகளும்.. ஒரு சில பூகம்பங்களும்.. எதிர்பார்க்காத சூறாவளிகளும் ஏற்பட்டன. பொதுக்குழு தொடங்குவதற்கு முன்பாக அதிகாலை வர நடந்த உயர் நீதிமன்ற வழக்கு தொடங்கி பொதுக்குழு இறுதியில் ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது வரை பல அதிர்ச்சி தரும் சம்பவங்களை நேற்று அதிமுக கண்டது!

ஓபிஎஸ்
நேற்று பொதுக்குழுவில் அதிமுகவின் தீர்மானக்குழு ஓபிஎஸ் ஒப்புதலோடு வழங்கிய அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்த தீர்மானங்களை நிறைவேற்ற மாட்டோம் என்று அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டாக அறிவித்தனர். 23 தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம். ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கான தீர்மானத்தை கொண்டு வரும் பொதுக்குழுவே உண்மையான பொதுக்குழு கூட்டம் என்று கேபி முனுசாமி, சி வி சண்முகம் போன்றோர் அறிவித்தனர்.

பொதுக்குழு
இந்த நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்.. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அனுமதி இல்லாமலே மேடையில் அறிவித்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவில் நடந்த விஷயங்கள் எல்லாம் சசிகலாவிற்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி எல்லாம் நடக்க போகிறது.. ஓபிஎஸ் வந்ததும் இப்படி கத்த வேண்டும் என்ற திட்டம் உள்ளது என்று எல்லா தகவலும் சசிகலாவிற்கு முன்பே தெரிந்து உள்ளதாம்.

திட்டம் என்ன?
அதாவது கூட்டத்தின் திட்டம் என்ன, 23 தீர்மானங்களை நிராகரிப்பது, எல்லோருக்கும் ஓபிஎஸ்ஸை ஒன்றாக எதிர்ப்பது போன்ற விஷயங்கள் அனைத்தும் நடப்பதற்கு முன்பே சசிகலா காதுகளுக்கு சென்று இருக்கிறதாம். அதோடு கூட்டத்தில் இருந்து.. உள்ளே இருந்த விஷயங்களையும் முக்கிய புள்ளி ஒருவர் சசிகலாவிற்கு கசிய விட்டு இருக்கிறாராம். அதாவது மீடியாவில் வராத விஷயங்களை எல்லாம் சசிகலாவிற்கு இவர் புட்டு புட்டு வைத்து இருக்கிறாராம்.
Recommended Video

சசிகலா பார்த்தார்
அதோடு சசிகலா அதிமுக பொதுக்குழுவை லைவ் ரிலேவில் பார்த்து இருக்கிறார். எதிர்பார்த்தபடியே ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டது. எடப்பாடிக்கு ஆதரவாக எல்லோரும் பேசியதை எல்லாம் பார்த்துள்ளார். அதோடு நேற்று கூட்டத்தில் மாலை போட வந்த நிர்வாகிகளை.. இருங்கப்பா .. நீங்க வேற.. பேச விடுங்க என்று கோபமாக எடப்பாடி பழனிசாமி கடுப்படித்தார். இதையும் சசிகலா டிவியில் பார்த்தபோது கமெண்ட் அடித்து இருக்கிறார்.

கூடுதல் கூட்டம்
நேற்று சசிகலா வீட்டில் கொஞ்சம் கூடுதலாகவே கூட்டம் இருந்துள்ளது. அதிமுக பொதுக்குழு நடப்பதால் சசிகலா என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பில் அவரின் வீட்டில் சில கூடுதல் நிர்வாகிகள் இருந்துள்ளனர். அதன்பின் அதிமுக பொதுக்குழு முடிந்ததும், அதை பற்றி சசிகலா வீட்டில் இருந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துள்ளார். நேற்று ஒற்றை தலைமை பற்றி முடிவு எதுவும் எடுக்கப்படாத சந்தோசத்தில் சசிகலா தரப்பு இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications