தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஸ்டாலின் உருவ கேலி செய்தாரா? தேர்தல் ஆணையத்தில் திமுக தலைவர் மீது புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டாலினின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் கடும் சர்ச்சையாக மாறியுள்ளது. தவெக வேட்பாளர் சத்யபாமாவை திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் உருவகேலி செய்து பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழக மாநில வழக்கறிஞர் அணியினர் தற்போது தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளனர்.

தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து நேற்றைய தினம் நடத்திய பிரச்சாரம் செய்தார்.. அப்போது "இந்தத் தொகுதி த.வெ.க. வேட்பாளரை பெட்டி பாமா, பல்டி பாமா என சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை மக்கள் அழைக்கிறார்கள்.. எப்படித்தான் அந்த உருவத்தை வைத்து கொண்டு, பல்டி அடிச்சாங்க தெரியல?" என்றெல்லாம் ஸ்டாலின் பேசியதாக தெரிகிறது.

Stalin Remark TVK Complaint Election Commission

எப்படி பல்டி அடிச்சாங்க தெரியல

இந்தப் பேச்சு சோஷியல் மீடியாவிலும், அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாகியுள்ளது. ஒரு பெண் வேட்பாளரின் தோற்றத்தைக் கேலி செய்வது தேர்தல் அரசியலின் தரத்தைக் குறைக்கும் என்று தவெக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கக்கூடிய இடத்தில், தனிநபரின் உடல் தோற்றத்தை முன்வைத்துப் பேசுவது ஏற்கத்தக்கது அல்ல என்றும் தவெக தரப்பு கூறியுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இதற்கு நேற்றைய தினமே கண்டனம் தெரிவித்திருந்தார்.. "தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின்... நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்புச் சகோதரி சத்தியபாமா பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஸ்டாலின் மீது விமர்சனம்

முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில்... அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார்.

அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். இதுதான் திமுக-வின் டீன். தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

தவெக வழக்கறிஞர் அணி

இந்நிலையில், ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழக மாநில வழக்கறிஞர் அணியினர் தற்போது தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளனர். மு.க. ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ள அவர்கள், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதுதவிர, டிஜிபி அலுவலகம், சென்னை காவல் ஆணையர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தவெக வழக்கறிஞர் அணி சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. பெண் வேட்பாளரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்காண்டுள்ளனர்.

மு.க. ஸ்டாலின் இதுபோன்ற கருத்துகளைத் தொடர்ந்து தெரிவிக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அவரது தேர்தல் பிரசாரத்திற்கு உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் புகாரில் கோரப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தின் வீடியோ, ஆடியோ பதிவுகள் மற்றும் ஊடகங்களில் வெளியான பதிவுகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+