ஊட்டிக்கு வா.. 5 லட்சத்தை ஆட்டைய போட்ட கும்பல்! 14 மணி நேரம் வாட்ஸாப் காலில் தொல்லை! பரபர சென்னை
சென்னை: டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளதாக கூறி, சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் 5 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், சென்னையில் இருந்து உதகை வந்து பணத்தை வங்கி கணக்கில் மாற்றும் வரை, 14 மணி நேரம் வாட்சப் காலில் அந்த கும்பல் மிரட்டியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வயதானவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள நபர்கள் பெண்களை குறிவைத்து அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து பேசி மோசடி நடைபெறுவதாகவும், எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுமென போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே சட்டவிரோத பணப் பறிமாற்றம் தங்கள் வங்கிக் கணக்கில் நடைபெற்றுள்ளதாக, தொழிலதிபர்களை மிரட்டியும், டிஜிட்டல் கைது செய்துள்ளதாகக் கூறி சைபர் கிரைம் மோசடி நடப்பதாகவும், போலீசார் எச்சரிக்கின்றனர்.
சட்ட விரோத பரிமாற்றம் தங்கள் வங்கி கணக்கில் நடைபெற்றிருக்கிறது, வெளிநாட்டிலிருந்து வந்த பார்சலில் போதை பொருட்கள் இருக்கிறது என கூறி ஸ்கைப் வீடியோ காலில் காவல்துறை உடை அணிந்து சிலர் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர் சைபர் கிரைம் கொள்ளையர்கள். உங்களை கைது செய்ய தற்போது உடனடியாக அதிகாரிகள் வருவார்கள், இணைப்பை அவருக்கு பார்வர்ட் செய்கிறேன் என பதட்டதோடு பேசுவார்கள்.
மேலும், உச்ச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து இருக்கிறது, ரிசர்வ் வங்கி உங்கள் வங்கி கணக்கை முடக்கி இருக்கிறது என ஏதாவது ஒரு மத்திய அரசு துறையின் பெயரை சொல்லி மிரட்டுவார்கள். எதிர்முனையில் இருப்பவர்கள் பதட்டத்தில் சிக்குவது தெரிந்து விட்டால், ஆயிரம் ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாய் வரை அவர்கள் பணத்தை சுருட்டி விடுவார்கள். இப்படி இந்த மோசடி கும்பலின் அட்டுழியம் அதிகரித்து வரும் நிலையில், செல்போன் அழைப்பு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகம் விழிப்புணர்வு செய்தியை பகிர்ந்து வருகிறது.
ஆனால் எவ்வளவோ முயன்றும் இதுபோன்ற மோசடிகளை தடுக்க முடியவில்லை. அதே நேரத்தில் மோசடியில் சிக்கித் தவிக்கும் மக்களும் அதிகரித்து வருகிறார்கள். அப்படித்தான் சென்னையில் ஒரு பெண்ணிடம் 5 லட்சம் ரூபாயை மோசடி செய்திருக்கிறது கும்பல். மேலும் அவரை சென்னையில் இருந்து உதகைக்கு செல்லும் படியும் மிரட்டல் விடுத்ததோடு 14 மணிநேரம் வாட்ஸாப் காலில் தொடர்பில் இருந்திருக்கின்றனர்.
சென்னையில் பிரபல நிறுவனத்தில் பணிபுரியும் அந்த பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. எதிர்முனையில் பேசிய நபர் தான் காவல்துறையில் பணியாற்றுவதாகவும், தற்போது சிறையில் இருக்கும் ஒரு நபருடைய பண மோசடி வழக்கில் உங்களுக்கு தொடர்பு இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். உங்களை கைது செய்யப் போகிறோம் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் தனக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை எனவும், அவர் யார் என்று தெரியாது எனக் கூறியிருக்கிறார்.
சிறிது நேரத்தில் வட்ஸாப் காலில் தொடர்பு கொண்ட மோசடி நபர்கள் அந்த பெண்ணை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாகவும், யாரிடமும் தெரிவிக்காமல் உதகையில் உள்ள ஹோட்டலுக்கு சென்று தங்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து உதகை சென்ற அவர் தங்கும் விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறார். தொடர்ந்து 14 மணி நேரம் அந்த பெண்ணை வாட்ஸாப் காலில் மிரட்டிய அந்த நபர்கள் அந்த பெண்ணின் வங்கி கணக்கு விவரங்களை பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்த 5 லட்சம் ரூபாயை பறித்துள்ளனர்.
மேலும் உடலில் அங்க அடையாளங்களை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறி அந்த பெண்ணின் ஆடைகளை அகற்ற கூறியுள்ளனர். இதனால் பயந்து போன அந்த பெண் இணைப்பை துண்டித்துள்ளார். நண்பர்களிடம் கூறியதை அடுத்தே தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என தெரிந்து கொண்ட அந்த பெண் இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications