இப்போதானப்பா சின்னம் ஒதுக்குனாங்க.. அதுக்குள்ள இப்படியா.. மற்ற கட்சிகளை தெறிக்கவிடும் அமமுக
Recommended Video

சென்னை: அடேங்கப்பா..! என்ன ஒரு வேகம், என்ன ஒரு துரிதம், என்ன ஒரு தந்திரம்..! இன்று காலையில் ஒதுக்கப்பட்ட ஒரு சின்னம், அதற்குள்ளாக மாநிலம் முழுக்க சுவர்களின் மீது மின்னிக் கொண்டு உள்ளது.
அந்த சின்னம் பரிசுப் பெட்டி. சின்னம் ஒதுக்கப்பட்ட கட்சி சசிகலா தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.
இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டசபை தொகுதிகள், மற்றும் லோக்சபா தேர்தலில் அமமுக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

உச்சநீதிமன்றம்
அனைத்து வேட்பாளர்களுக்குமே பொதுவாக குக்கர் சின்னம் வழங்கப்பட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் அதற்கு சம்மதிக்காத நிலையில், வேறு ஏதேனும் ஒரு பொதுச் சின்னமாவது ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.

நம்பிக்கை
குக்கர் சின்னம், ஏற்கனவே மக்கள் மனதில் ஓரளவுக்கு பதிவாகி இருந்ததால், அந்த சின்னம் கொடுக்கப்படாதது தினகரன் அணிக்கு பலவீனம் என்று சொல்லப்பட்டது. ஆனால் தினகரன் கட்சியினரோ ஜெயலலிதாவின் ஆர்கே நகரிலேயே நாங்கள் வெற்றி பெற்றவர்கள், எங்களுக்கு எந்த சின்னத்தை ஒதுக்கினாலும், உடனடியாக அதை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வாக்கு வேட்டையாடுவோம் என்று மிகுந்த நம்பிக்கையோடு தெரிவித்து வந்தனர்.

பம்பரமாக சுழலும் நிர்வாகிகள்
இந்த நிலையில் இன்று காலை தினகரன் அணியினருக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களிலேயே, தமிழகம் முழுக்க உள்ள சுவர்களில் பரிசு பெட்டி சின்னம் மின்னிக் கொண்டு உள்ளது. அந்த அளவுக்கு களத்தில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் மிகவும் பம்பரமாக சுழன்று, வேலை செய்து வருகிறார்கள் என்பது இதன் மூலமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள்
மிகக் குறுகிய காலமே இருப்பதால் பரிசுப் பெட்டி சின்னத்தை எந்த அளவுக்கு மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க முடியுமோ அந்த அளவு சேர்க்க வேண்டும் என்பதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முனைப்பு காட்டி வருகிறது என்பதற்கு இது ஒரு அடையாளம். மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகன், டேவிட் அண்ணாதுரை, ஆரணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தமிழன் ஆகியோரது பெயர்கள் பொறிக்கப்பட்ட விளம்பரங்களுடன், பரிசு பெட்டி சின்னம் சுவர்களில் இடம்பெற்றிருப்பதை நீங்களே படங்களில் பார்க்கலாம். தினகரன் அணியினரின் இந்த வேகம் மற்ற கட்சிகளுக்கு கண்டிப்பாக கிலியூட்டும் என்பதில் ஐயமில்லை.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications