சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அக்னி நட்சத்திரத்திற்கு மத்தியில்.. 2 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை.. சென்னை வெதர்மேன் ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: திண்டுக்கல் மற்றும் தேனி பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் எனச் சென்னை வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்,

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் இன்று முதல் தொடங்கியது.

Dindigul-Theni belt gets heavy rain says tamilnadu weather man Pradeep john

25 நாட்கள் வரை அதாவது, வரும் மே 29ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் தமிழகத்தில் நீடிக்கும். ஏற்கனவே, மாநிலத்தில் பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வரும் சூழ்நிலை, வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்கவுள்ளது.

இந்நிலையில், கோடை வெயிலில் துவண்டு கிடைக்கும் மக்களை குஷிப்படுத்தும் விதமாகத் திண்டுக்கல் மற்றும் தேனி பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்,

இது குறித்து அவர் தனது ட்விட்டரில், இந்த பருவத்தில் மிக தீவிர கன மழை திண்டுக்கல் - தேனி பெல்டில் பெய்யும். மழை மேகங்கள் மேற்பரப்பில் இருந்து 15 கி.மீ உயரத்திற்கு உயர்ந்துள்ளன. இதனால் அதிக தீவிரம் கொண்ட இடி மற்றும் மின்னலுடன் மழை இருக்கும். வைகை அணை அருகே பலத்த மழை பெய்யும் எனப் பதிவிட்டுள்ளார்.

English summary
Tamilnadu weatherman Pradeep john's latest tweet on Tamilnadu Rain alert.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X