சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. திமுக மீது இயக்குநர் பா. ரஞ்சித் பாய்ச்சல்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் அமைப்பு செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதியின் சர்ச்சை பேச்சுக்கு இயக்குநர் பா. ரஞ்சித் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.எஸ். பாரதி, பிராமணர்களை மிக கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என கூறியிருந்தார்.

Director Pa Ranjith slams DMKs RS Bharathi remarks on Dalits

ஆர்.எஸ். பாரதியின் இந்த கருத்துகள் கடும் விமர்சனங்களுக்குள்ளாகின. இதனையடுத்து தம்முடைய பேச்சுக்காக ஆர்.எஸ். பாரதி வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த பிரச்சனை குறித்து பதிவிட்டுள்ளதாவது:

பார்ப்பனிய வர்ண அடுக்குகளுக்கு எதிராக அயோத்திதாசர் தொடங்கிய திராவிட, தமிழ் உணர்வின் தொடர்ச்சியில் பெரியாரும் முன்னெடுத்த சாதி எதிர்ப்பு திராவிட கொள்கைகளால் ஆட்சிக்கு வந்த பலர் இன்று பெரியாரையும் மறந்து(மறுத்து) விட்டார்கள் என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்ந்துகின்றன!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவன் தொடங்கி அயோத்தி தாசர், ரெட்டைமலை சீனிவாசன், எல்.சி குருசாமி, எம்.சி ராஜா,புரட்சியாளர் அம்பேத்கர், சிவராஜ், மீனாம்பாள், சத்தியவாணிமுத்து இன்னும் எத்தனை எத்தனையோ பெயர் தெரியாத போராளிகளின் உழைப்பின் பயனாக பெற்ற உரிமையை , /அவர்களின் போராட்ட வரலாற்றை மறுத்து பிச்சை என்று சொல்லும் சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள்.

பெரியார் பார்வையை மறந்து விட்ட உங்களுக்கு அவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. முன்னோடிகளை படமாக ஆக்கி அஞ்சலி செலுத்துவதை விட , முதலில் அவர்களை கருத்தில் இருத்த பழகுங்கள். இவ்வாறு பா. ரஞ்சித் கூறியுள்ளார்.

English summary
Director Pa Ranjith has slammed DMK's RS Bharathi remarks on Dalitis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X