அண்ணாமலை தமிழக முதல்வராவார்! ஆனால் பாஜக இதை கண்டிப்பாக செய்யனும்! கோரிக்கை வைத்த பேரரசு! என்னவாம்?
சென்னை : நடிகர் விஜய்க்கு திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட அதிரிபுதிரி ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பேரரசு சில வருடங்களுக்கு முன்னர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட நிலையில், மாநில தலைவரான அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளது எனவும், ஆனால் பாஜக தலைமை ஒரு விஷயத்தை கட்டாயம் செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் இயக்குனர் பேரரசு. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் திரையுரகில் முதன்முறையாக எதிரும் புதிரும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.
இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜயின் வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களான திருப்பாச்சி, சிவகாசி ஆகிய இரண்டு மிகப்பெரிய வெற்றி படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

இயக்குனர் பேரரசு
சிவகாசி, திருப்பாச்சி, தர்மபுரி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை என ஊர் பெயர்களையே படங்களின் டைட்டிலாக வைத்து வெற்றி பெற்ற இவர் விஜய் மட்டுமல்லாது நடிகர் அஜித், விஜயகாந்த், அர்ஜுன், பரத் என பல முன்னணி நடிகர்களோடு கைகோர்த்தார். விஜய் அஜித் நடித்த படங்களை தவிர மற்ற திரைப்படங்கள் அவ்வளவாக ஓடாத நிலையில் திரையிலிருந்து மெல்ல ஓரம் கட்டப்பட்ட அவர் கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு பேசி வருகிறார்.

பாஜக ஆதரவு
கடந்த 2020ஆண்டில் கூட நடிகர் விஜய் நடிக்கும் படத்தை மீண்டும் பேரரசு இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது கைகூடாமல் போனது. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து இயக்குனர் பேரரசு பாஜகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளிலும் நடந்து முடிந்த தேர்தல்களிலும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பாஜக அண்ணாமலை
இந்நிலையில் தற்போதைய பாஜக மாநில தலைவரான அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளது எனவும், ஆனால் பாஜக தலைமை ஒரு விஷயத்தை கட்டாயம் செய்ய வேண்டுமென கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,"திராவிட முன்னேற்ற கழகத்தில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற மிகத் திறமையான பேச்சாளர்கள் இருந்தனர். அதிமுகவில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் என்ற மக்கள் மனதில் பதிந்த மிகப் பிரபலமான முகம் இருந்தது. ஆனால் பாரதீய ஜனதா கட்சியில் இதுபோன்ற பேச்சாளர்கள் இல்லை. மக்களுக்கு நன்கு அறிமுகமான எம்ஜிஆர் போன்ற முகங்கள் இல்லை. ஆனால், இப்போது பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையை தமிழகத்தில் உள்ள மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர்.
Recommended Video

முதல்வர் தகுதி
அவருக்கு தமிழக மக்கள் எங்கு சென்றாலும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் முதல்வராகும் தகுதி உள்ளது" என கூறியுள்ளார். இதனையடுத்து பாஜகவின் இதனை வெகுவாகப் பாராட்டி வரும் நிலையில், பலரும் விமர்சித்து வருகின்றனர். கடந்த சில நாடுகளுக்கு முன்னர் அண்ணாமலையை முன்னாள் முதல்வர் காமராஜரோடு பேரரசு ஒப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications