விஜயகாந்த் கைகளுக்கு முத்தமிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்! கூடவே மகிழ்ச்சியான செய்தியையும் சொன்ன விஜய் தந்தை
சென்னை: விஜயகாந்த் விரைவில் பழைய நிலைமைக்கு திரும்புவார் என நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் விஜயகாந்தை வைத்து நிறைய படங்களை இயக்கியுள்ளார். சட்டம் ஒரு இருட்டறை, செந்தூரபாண்டி, வசந்தராகம், சட்டம் ஒரு விளையாட்டு, குடும்பம், நீதியின் மறுபக்கம், சாட்சி, புதுயுகம், ஓம் சக்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரஜினி, கமல் என உச்ச நட்சத்திரங்களுக்கு மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தவர் விஜயகாந்த். எஸ்ஏ சந்திரசேகரின் இயக்கத்தில் விஜயகாந்த் 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தனது நடிப்புத் திறமையால் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

விஜயகாந்த்
அது போல் விஜயகாந்த் நடித்த பெரும்பாலான படங்களில் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்த போது பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்க கடனை கலை நிகழ்ச்சிகளை நடத்தி அடைத்தார்.

தேமுதிக
அது மட்டுமல்லாமல் நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த விஜயகாந்த் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். அண்மையில் அவருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவர் அரசியலில் நேரடியாக ஈடுபடாமல் உள்ளார்.

தேமுதிகவில் இணைந்த ரசிகர்கள்
விஜயகாந்தால் தேமுதிகவில் இணைந்தவர்கள் எல்லாம் தற்போது அவரது நிலையை கண்டு மனம் வேதனை அடைகிறார்கள். அவர் விரைவில் குணமடைந்து பழைய நிலைக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த நிலையில் விஜயகாந்த்- பிரேமலதா நேற்று முன் தினம் தங்களது 33 ஆவது திருமண ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

திருமண நாள்
திருமண நாளில் வாழ்த்து கூறுவதற்காக சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சென்றார். அங்கு விஜயகாந்துக்கும் அவருடைய மனைவி பிரேமலதாவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். விஜயகாந்த் ஊதா நிற சட்டை, பட்டு வேட்டியில் இருந்தார். எஸ்.ஏ. சந்திரசேகர் விஜயகாந்தின் கைகளுக்கு முத்தம் கொடுத்தார்.

புகைப்படங்கள்
இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஒன்றரை ஆண்டுளுக்கு பிறகு விஜயகாந்தை நேரில் சந்திக்கிறேன். அவர் நலமாக உள்ளார். அவரை பார்த்தவுடன் எனக்கு பழைய நினைவுகள் மலர்ந்தன.

பெரிய எனர்ஜி
எனக்கு ஒரு பெரிய எனர்ஜி கிடைத்தது போல் உள்ளது. விரைவில் அவர் பழைய நிலைமைக்கு வந்துவிடுவார் என நம்புகிறேன். விஜய் என்றாலே வெற்றிதானே. விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது தொண்டர்களுக்கு மன மகிழ்ச்சி அடைந்தனர். புதுதெம்புடன் தொண்டர்கள் இடைத்தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அது போல் நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக புத்துணர்ச்சியுடன் போட்டியிடும் என்றே தெரிகிறது.

விஜிக்கு புத்தாண்டு வாழ்த்துகள் சொன்ன சத்யராஜ்
விஜயகாந்தை கடந்த புத்தாண்டு அன்று நடிகர் சத்யராஜ் சந்தித்தார். விஜயகாந்த் கதாநாயகன் ஆவதற்கு முன்பே சட்டம் ஒரு இருட்டறை, நூறாவது நாள் உள்ளிட்ட படங்களில் சத்யராஜ் வில்லனாக நடித்திருந்தார். இருவருக்கும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு இருந்து வருகிறது. விஜயகாந்தை ரஜினி, கமல், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் விஜி என்றுதான் அன்போடு அழைப்பார்களாம். அது போல் விஜயகாந்தின் பிறந்தநாளன்று நடிகர் கார்த்தி நேரில் சந்தித்தார். ஒரு முறை ரஜினிகாந்த் விஜயகாந்தை நேரில் சந்தித்து மகிழ்ந்தார். அவ்வப்போது விஜயகாந்த் தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். கடந்த 1 ஆம் தேதி புதிய இரண்டு 100 ரூபாய் தாள்களை தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்கு வழங்கினார்.
-
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
சிபிஎம் அவசர செயற்குழு.. திடீரென என்ட்ரி கொடுத்த வைகோ.. திமுக கூட்டணியில் பரபரப்பு -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
"ப்ளீஸ் திருமா".. ஸ்டாலினின் அந்த வார்த்தை! மா.கம்யூனிஸ்ட்டால் விசிகவிற்கு விழும் அடி.. திமுக ‘செக்’ -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்!












Click it and Unblock the Notifications