சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செஸ் ஒலிம்பியாட்.. நிறைவு விழாவிலும் பந்தயம் அடித்த இயக்குநர்.. எப்படி சாதித்தார் விக்னேஷ் சிவன்?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

Director Vignesh Shivan Shares his experience about Chess Olympiad Closing Ceremony

செஸ் ஒலிம்பியாட் தொடரின் நிறைவு விழா நேற்று இரவு பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான செஸ் வீரர்கள் கலந்துகொண்டனர். 11 சுற்றுகளாக நடைபெற்ற செஸ் போட்டியில் பல்வேறு அணிகள் தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்தன.

Recommended Video

    Chess Olympiad நிறைவு விழாவில் Drums Sivaman-ன் Performance *Politics

    இறுதியாக ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப்பதக்கத்தையும், அர்மேனியா அணி வெள்ளிப்பதக்கத்தையும், இந்திய பி அணி வெண்லகப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு நடைபெற்ற பிரம்மாண்ட நிறைவு விழாவில், அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    வாக்குக்காக இலவசங்கள்.. மாநில நிதிநிலைமையை சீரழிக்கிறது.. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு! வாக்குக்காக இலவசங்கள்.. மாநில நிதிநிலைமையை சீரழிக்கிறது.. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு!

    இந்த நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், செஸ் வீரர்கள், சர்வதேச செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் ஆளப்போறான் தமிழன் பாடலுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவுக்கு எண்ட்ரி கொடுத்தார். இதனைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் நிறைவு விழா பிரம்மாண்டமாக தொடங்கியது.

    அசராத எடப்பாடி.. சளைக்காத ஓபிஎஸ்.. அதிமுக பொதுக்குழு வழக்கு ஹைகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைஅசராத எடப்பாடி.. சளைக்காத ஓபிஎஸ்.. அதிமுக பொதுக்குழு வழக்கு ஹைகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

    பின்னர் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட இசை கலைஞர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தின் பெருமையை விளக்கும் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடக்க விழா போன்ற நிறைவு விழா நிகழ்ச்சிகளையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் சிறப்பாக இயக்கினார்.

    இதுகுறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறுகையில், தமிழ்நாட்டின் மிகமுக்கிய நிகழ்வின் முக்கிய அங்கமாக செயல்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை காட்சிப்படுத்தியதில் தொடங்கி, பின்னர் விழாவை சிறப்பாக நடத்தினோம். அதனால் சிறிய எதிர்பார்ப்பு எங்கள் மீது ஏற்பட்டது. இருந்தும், அந்த எதிர்பார்ப்புகளை பூர்தி செய்யும் வகையில், நிறைவு விழாவை சிறப்பாக நடத்தி முடித்தியுள்ளோம்.

    இதற்கு நடன கலைஞர்கள், பயிற்சியாளர்கள் என ஏராளமானோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நேரம் குறைவாக இருக்கிறது என்பது முன்னதாகவே தெரியும் என்பதால், இந்த காலகெடுவுக்குள் என்ன செய்ய முடியுமோ, அதனை சிறப்பாக செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

    English summary
    Director Vignesh Shivan Shares his Experience about Chess Olympiad Closing Ceremony. He thanks Dancers, Organisers and Tamilnadu Government for this opportunity. He said, We Worked Together in a very short time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X