ரேஷன் கடைகளில் பாமாயில் நிறுத்தம்.. தீபாவளி நெருங்கும் நிலையில் பரிதவிக்கும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்காக 200 லட்சம் பாமாயில் பாக்கெட்களை கொள்முதல் செய்வதற்காக அறிவிக்கப்பட்ட டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுட்டிக்காட்டி செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பலரும் பாமாயில் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு பாமாயில் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஒரு லிட்டர் வீதம் சுமார் 600 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கடந்த ஜூன் 5-ம் தேதி டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. கடந்த செப்டமபர் 8-ம் தேதி டெண்டர் திறக்கப்பட்டு, 4 நிறுவனங்களுக்கு பாமாயில் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யும் டெண்டர் ஒதுக்கப்பட்டது.

Discontinuation of palm oil in ration shops What is happening around the time of Diwali

இதில், முதல் கட்டமாக 200 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை இன்றைக்குள் (29-ம் தேதிக்குள்) நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு இந்த நிறுவனங்கள் விநியோகம் செய்ய கடந்த செப்டம்பர் 29-ம் தேதி உத்தரவிடப்பட்டது. விநியோகம் செய்ய வேண்டிய பாமாயில் பாக்கெட்டுகள் விகிதாச்சார அடிப்படையில் பிரிக்கப்படவில்லை என்று கூறி நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெண்டர் எடுத்துள்ள கேடிவி ஹெல்த் புட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

அதில், "200 லட்சம் பாக்கெட்டுகளை முதலில் விநியோகம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், 200 லட்சம் பாக்கெட்கள் விநியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ள எம்ஜிஎம் நிறுவனம் 80 லட்சம் பாக்கெட்டுகளும், 210 லட்சம் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ள குமார் ஆக்ரோ நிறுவனம் 52 லட்சம் பாக்கெட்டுகளும், 180 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டிய இன்டகரேட் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளும், 360 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டிய எங்கள் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அதாவது விநியோகம் செய்ய வேண்டிய பாக்கெட்டுகள் அடிப்படையில் சரியான விகிதாசார அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. 360 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ள எங்கள் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்றும் 150 லட்சம் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டி எம்ஜிஎம் ஆயில் நிறுவனம் 80 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் எனறு உத்தரவிட்டது சரியானது கிடையாது. எனவே, பாமாயில் விநியோகம் தொடர்பாக கடந்த செப்டம்பர் 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விகிதாசார அடிப்படையில் பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய உத்தரவிடும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதி, பாமாயில் விநியோகம் தொடர்பாக செப்டம்பர் 29-ம் தேதி நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த இடைக்கால உத்தரவை சுட்டிக்காட்டி செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரேஷன் ஊழியர் ஒருவரிடம் கேட்ட போது, நீதிமன்ற உத்தரவின் காரணமாக பாமாயில் வரவில்லை என்று கூறினார். அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து பாமாயில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+