பதவி விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தால் தகுதி நீக்கம்
ஊராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
சென்னை: கிராம ஊராட்சித் தலைவராகப் பதவி வகிப்பவர்கள் தங்கள் பதவியினை உரியவாறு ராஜினாமா செய்யாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தால் , அவர் போட்டியிடும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அல்லது வெற்றி வாய்ப்பினை இழந்தாலும், தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதியன்று ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மார்ச் 4ஆம் தேதி, மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 28 ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடையே வார்டு பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. பாமக, தேமுதிக, நாம் தமிழர், மநீம, அமமுக ஆகிய கட்சிகள் தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் நிலையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிகள் களமிறங்குகின்றன.
இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தேர்தல் அட்டவணையினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 26.01.2022 அன்று வெளியிட்டது.
அதன்படி தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 28.01.2022 முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. மேற்படி பதவியிடத்திற்கு தற்போது மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் அல்லது கிராம ஊராட்சித் தலைவராகப் பதவி வகிப்பவர்கள் தங்கள் பதவியினை உரியவாறு ராஜினாமா செய்யாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் தேர்வில், அவர் போட்டியிடும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அல்லது வெற்றி வாய்ப்பினை இழந்தாலும், அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்கின்ற உறுதிமொழி ஆவணத்தில் அவரது இருப்பிடம் குறித்து அளித்திருக்கும் உறுதிமொழியினை ஆவணமாகக் கொண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி அவர் தற்போது தொடர்புடைய ஊராட்சிப் பகுதியில் வசிக்கவில்லை என உறுதி செய்யப்பட்டு, மேற்படி சட்டம், பிரிவு 41(1)-ன்படி, அவரை தற்போது அவர் வகிக்கும் பதவியில் தகுதிநீக்கம் செய்ய ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications