நெருங்கும் புயல்.. அச்சுறுத்தும் சூறைக்காற்று! சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து
சென்னை: டிட்வா புயல் இலங்கையை கடந்து தற்போது தமிழக கடலோர பகுதியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் நாளை சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையிலிருந்து திருச்சி, தூத்துக்குடி, மதுரைக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னைக்கு வரும் மற்றும் சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் என மொத்தம் 54 விமானங்களின் இயக்கம் நாளை ரத்து செய்யப்படுகிறது.

ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை மதுரை, திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, சேலம், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் போன்ற நகரங்களுக்கு செல்லும் விமானங்களாகும். நாளை காலை முதல் இரவு வரை ஷெடுல் செய்யப்பட்ட இந்த விமானங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானங்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரத்து செய்யப்பட்ட அனைத்து விமானங்களும் ATR ரகத்தைச் சேர்ந்தவை. இந்த வகை விமானங்கள் கடுமையான புயல் காற்று மற்றும் பலத்த மழை போன்ற மோசமான வானிலைக்கு அதிக அளவில் பாதிக்கப்படக்கூடியவை.
இந்த வகை விமானங்கள் குறைந்த உயரத்தில், அதாவது 25,000 அடி உயரத்திற்கும் கீழேதான் பறக்கும். இதனால் மழை மேருங்கள், இடி, மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களில் இந்த விமானம் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். அதேபோல புயல் மற்றும் மழைக்காலங்களில் உருவாகும் மிக கடுமையான காற்றை இந்த விமானங்களின் இன்ஜின்களால் சமாளிக்க முடியாது. இந்த விமானங்கள் எரிபொருள் சிக்கனத்தை கருத்தில் கொண்டு, குறைந்த திறனுடன் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் உள்நாட்டு நகரங்களை இணைப்பதற்காகவே இந்த விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதன் திறன் குறைவு என்பதாலும், புயல் காற்றை சமாளிக்கும் அளவிற்கு இருக்காது என்பதாலும், இந்த வகை விமானங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
விமான நிலைய அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், "இத்தகைய மோசமான வானிலையில் ATR விமானங்களை இயக்குவது ஆபத்தானது. பயணிகளின் நலனையும், விமானங்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 54 ரத்து செய்யப்பட்ட விமானங்களைத் தவிர, நிலைமையைப் பொறுத்து மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்படலாம். எனவே, பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன், தங்களது விமான நிலை குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications