இரவு முதல் பட்டாசு வெடிக்கும் மக்கள்! சென்னையில் அதிகரித்த காற்று மாசு! கும்மிடிப்பூண்டியில் மோசம்!
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் நேற்று இரவு முதல் பட்டாசு வெடித்து வருவதால் திடீரென காற்று மாசு அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது வழக்கம். இந்த பட்டாசுகள் அதிகளவு வெடிப்பதால் காற்றில் மாசு ஏற்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு அதிகமாக இருந்து வருகிறது.
டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக சொல்கிறார்கள். இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 9ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரத்தை Air Quality Index என்கிறார்கள். இதன் அளவானது 0 முதல் 50 ஆக இருந்தால் காற்று சுகாதாரமாக இருக்கிறது என அர்த்தம். அது போல் 51 முதல் 100 ஆக இருந்தால் திருப்திகரமாக இருக்கிறது என்பதாகும். 101- 200 வரை இருந்தால் காற்றின் தரம் சுமாராக இருக்கிறது என்பதாகும்.
201 முதல் 300 வரை இருந்தால் காற்றின் தரம் மோசம் என்றும் 301- 400 அளவு இருந்தால் மிக மோசம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே 401 முதல் 500 வரை இருந்தால் அந்த இடம் ஆபத்துள்ள இடம் என்பது பொருளாகும். டெல்லி, நொய்டா உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரம் 400க்கு மேல்தான் இருக்கிறது. இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா முதலிடத்தில் உள்ளது. இங்கு காற்றின் தரம் 473 ஆக உள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த காற்று மாசு சென்னையிலும் எதிரொலித்துள்ளது. தீபாவளிக்காக நேற்று இரவு முதலே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் பெரும்பாலான இடங்களில் 101 முதல் 200 அளவில் காற்றின் தரம் பதிவாகியுள்ளது. பெருங்குடியில் 169, அரும்பாக்கத்தில் 134, கொடுங்கையூரில் 112, மணலியில் 109, ராயபுரத்தில் 121 என காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது.
அது போல் கும்மிடிப்பூண்டியில் 230, வேலூரில் 123, கடலூரில் 112 என காற்றின் தரம் பதிவாகியுள்ளது. காற்று மாசு ஏற்பட்டால் சுவாச பிரச்சினைகள் ஏற்படும். ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை இருந்தால் மூச்சுத்திணறல் ஏற்படும். மேலும் இதய பிரச்சினை உள்ளவர்களுக்கும் அசவுகரியத்தை தரும். ஆஸ்துமா இருப்போருக்கு மூச்சுதிணறலையும் ஏற்படுத்தும் என்கிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications