திமுக கூட்டணியில் இணையும் தேமுதிக? என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்காததற்கு இதுவே காரணம்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் தேமுதிக முதல்முறையாக திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதிமுகவுடன் பிரேமலதா விஜயகாந்த் பேசி வந்தாலும், அவர்களின் பேச்சுவார்த்தை முடிந்திருந்தால் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருப்பார். ஆனால் திமுக பக்கம் செல்ல பிரேமலதா விரும்புவதால், இன்றைய பொதுக்கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், என்டிஏ கூட்டணியின் முதல் கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி, டிடிவி தினகரன், ஜிகே வாசன், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி, பாரிவேந்தர் உள்ளிட்டோட் பங்கேற்றனர். ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக மற்றும் பாஜக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அவர்கள் கொஞ்சம் கூட பிடிகொடுக்கவில்லை என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணி பக்கம் சாய்வதாக விவரம் அறிந்தவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
தேமுதிக திமுக கூட்டணி பக்கம் சென்றதற்கு ராஜ்ய சபா சீட் விவகாரம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதனால் ஏற்பட்ட அதிருப்தியே திமுக உடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. இதன்பின் திமுகவுடன் விஜயகாந்திற்கு இருந்த நெருக்கம் தொடர்பாக பேச தொடங்கினார்கள். அதேபோல் விஜயகாந்த் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு திமுகவினரை அழைக்க தொடங்கினர்.
இதுதான் தேமுதிக கூட்டணிக்கு கொடுத்த சிக்னலாக அமைந்தது. இருந்தாலும் தேமுதிக இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல் தேமுதிகவுடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருந்தால், என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றிருப்பார். ஆனால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால், அவர்கள் பங்கேற்கவில்லை.
இதனால் திமுகவுக்கு ஒரு சாய்ஸாக தேமுதிக உள்ளது. திமுகவுக்கு தேமுதிக மட்டுமல்லாமல், ராமதாஸ் தலைமையிலான பாமகவும் உள்ளது. ஆனால் ராமதாஸ் விவகாரத்தில் விசிக முட்டுக்கட்டையாக உள்ளது. இதனால் தேமுதிக அல்லது ராமதாஸ் பாமக அணி இரண்டில் ஒன்றை திமுக கூட்டணிக்குள் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது.
என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் தேமுதிக பங்கேற்காததன் மூலமாகவே, அவர்கள் திமுகவுடன் கூடுதலாக பேசி வருகிறார்கள் என்றும் விவரம் அறிந்தவர்கள் பேசி வருகின்றனர். மேலும், தேமுதிக இரட்டை இலக்கத்தில் கேட்டு வருவதாகவும், அதனை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து ஒற்றை இலக்கத்தில் கொண்டு வர திமுக முயற்சித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications