70வது பிறந்தநாளில் தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்..கையசைப்பில் தெரிந்த கம்பீரம்..உற்சாக விசில்
சென்னை: அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே.. என்று விஜயகாந்தை நேரில் பார்த்த தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் பாடி பிறந்த நாள் வாழ்த்து கூறினர். தொண்டர்களைப் பார்த்து நாற்காலியில் அமர்ந்தவாரே கம்பீரமாக கையைத்தார் விஜயகாந்த். தங்களின் தலைவனை நேரில் பார்த்த உற்சாகத்தில் விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் தேமுதிக தொண்டர்கள்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சரத்குமார் வாழ்த்து
சமக தலைவர் சரத்குமார் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாழ்க்கையில எந்தவொரு பின்னடைவு இருந்தாலும் அதிலிருந்து போராடி வெற்றி பெற்றவர். அந்த போராட்ட குணம் உங்களிடத்தில் உள்ளது. மீண்டும் உங்கள் ரசிகர்களுக்காகவும், எங்களைப் போன்ற சகோதரர்களுக்காகவும் புத்துணர்ச்சி பெற்று இந்த பிறந்தநாள் முதல் சிறப்பாக எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என இந்த அன்பு தம்பி வேண்டிக் கொள்கின்றேன். மீண்டும் புரட்சிக்கலைஞர் விஜயகாந்தை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Recommended Video

விஜயகாந்த்
விஜயகாந்த் உடல் நலத்தைப் பற்றி அடிக்கடி பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. சமீபத்தில் கூட வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேமுதிக சார்பில் அறிக்கை வெளியானது. இந்த நிலையில் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

விஜயகாந்த் வருகை
தனது பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார். அவருடன் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். வெள்ளை சட்டை பேண்ட் கறுப்பு கண்ணாடி அணிந்து நாற்காலியில் அமர்ந்தவாறு தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.

குறையாத கம்பீரம்
விஜயகாந்த் என்றாலே கம்பீரமான பேச்சு, சுறுசுறுப்பான நடைக்கு சொந்தக்காரர். உடல் நல பாதிப்பினால் அவரது பேச்சு குறைந்து போனது. இப்போது நிற்க கூட முடியாமல் நாற்காலியில் அமர்ந்தவாறு தொண்டர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைத்தார் விஜயகாந்த்.

தொண்டர்கள் உற்சாகம்
தலைவனை நேரில் சந்தித்து வாழ்த்து கூற பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்களைப் பார்த்து கைகளை உயர்த்தி வணங்கினார். விஜயகாந்தை நேரில் சந்தித்த உற்சாகத்தில் பலரும் விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அன்னதானம்
விஜயகாந்த் பிறந்தநாளில் பிரியாணி விருந்துகள் களைகட்டும். அன்னதானம் ஸ்பெஷலாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக கொண்டாட்டங்கள் தடைபட்டன. இந்த ஆண்டு விஜயகாந்த் நேரில் சந்தித்து விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்றது தொண்டர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. தனது 70வது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி தான் எப்போது வள்ளல்தான் என்று நிரூபித்துள்ளார் விஜயகாந்த்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications