ஜவாஹிருல்லா முதல் தமிமுன் அன்சாரி வரை.. ஐயூஎம்எல் + மமக + மஜக கட்சிகள் 5 வேட்பாளர்கள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிநேய ஜனநாயக மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த 5 தொகுதிகளுக்கும் அந்தந்த கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

dmk-alliance-iuml-manithaneya-makkal-katchi-and-manithaneya-jananayaga-katchi-announced-their-cand

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காதர் மொய்தீனின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இதில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை நீண்டகாலமாக கூட்டணியில் உள்ளன. தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி சமீபத்தில் தான் திமுக கூட்டணியில் ஐக்கியமானது.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்

இதில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 3 தொகுதிகளில் ஏணி சின்னத்தில் போட்டியிட்டது. 3 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இதையடுத்து இந்த முறை தொகுதிகளின் எண்ணிக்கை 2 ஆக குறைக்கப்பட்டது. அதன்படி பாபநாசம், வாணியம்பாடி உள்ளிட்ட சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதில் பாபநாசம் தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஏஎம் ஷாஜகான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் வாணியம்பாடி சட்டசபை தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சையது பாரூக் போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி

மேலும் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு கடந்த முறை 2 தொகுதிகள் வழங்கப்பட்டது. இந்த தொகுதியில் உதயசூரியன் 2 தொகுதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாகையில் ஜவாஹிருல்லா, மணப்பாறையில் அப்துல் சமது ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கின்றனர்.

இதில் ஜவாஹிருல்லா தற்போது பாபநாசம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இவர் இந்த முறை தொகுதி மாறி நாகையில் போட்டியிடுகிறார். அதேபோல் அப்துல் சமது தற்போது மணப்பாறையில் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள நிலையில் மீண்டும் அங்கு களமிறங்கி உள்ளார்.

தமிமுன் அன்சாரி

அதேபோல், திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் தமிமுன் அன்சாரிக்கு ஒரு தொகுதியாக சிதம்பரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் சிதம்பரம் தொகுதியின் வேட்பாளராக கட்சியின் தலைவராக இருக்கும் தமிமுன் அன்சாரியே போட்டியிடுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சிதம்பரம் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

திமுக எத்தனை இடங்களில் போட்டி?

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக மொத்தம் 164 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதுதவிர கூட்டணியில் உள்ள மதிமுக உள்பட பிற சிறிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் 11 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இதன்மூலம் மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் தங்களின் சின்னத்தில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+