ஒரு சீட் போதாது.. திமுக எங்களுக்கான மரியாதையை கொடுக்கணும்.. வேல்முருகன் சொன்ன முக்கிய விஷயம்!
சென்னை: ஒரேயொரு தொகுதியை மட்டும் பெற்றுக் கொண்டு இந்த சட்டசபைத் தேர்தலை சந்திக்கக் கூடாது என்பதே தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளின் பெரும்பான்மை கருத்தாக உள்ளது என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார். எங்களுக்கு உரிய மரியாதையை திமுக வழங்க வேண்டும் என்று கூறிய வேல்முருகன், ஒருவேளை திமுக மறுத்தால் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
2021 சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழக வாழ்வுரிமை கட்சி இடம்பெற்று, பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. தவாக சார்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சட்டசபைத் தொகுதியில் தவாகவுக்கு மீண்டும் அதே கணக்கில் தொகுதி ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு தவாகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தவாக தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற முடியாது. அதனால் நாங்கள் ஏற்கனவே ஒரு தெளிவான முடிவை எடுத்து திமுக தலைமையிலான கூட்டணியில் பயணித்து வருகிறோம்.
கடந்த 4 நாட்களாக தவாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனையில் தவாகவில் இணைந்தவர்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்க தர வேண்டும் என்று பேசப்பட்டது. அதனால் திமுக தலைமையிலான கூட்டணியில் கூடுதல் இடங்களை பெற்று, தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற கருத்தை என்னிடம் கூறியுள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் தவாக பொதுக்குழு நடக்கவுள்ளது.
இந்த நிமிடம் வரை தவாக திமுக தலைமையிலான கூட்டணியில் தான் உள்ளது. பாமகவின் அன்புமணி பிரிவு அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் ராமதாஸ் தரப்பு பாமகவும், திமுக அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு இல்லை என்கிற போது, முக்கிய சமுதாயத்தின் பிரதிநிதியாக நான் இருக்கிறேன். தமிழ் தேசிய அரசியலை பேசக் கூடிய கட்சியாக தவாக உள்ளது.
அதனால் எங்களுக்கு உரிய மரியாதையை திமுக வழங்க வேண்டும் என்பது தான் இந்த 4 நாட்களாக நடக்கும் கூட்டத்தின் ஒற்றை கோரிக்கை. இதனை திமுகவும், முதல்வர் ஸ்டாலினும் நிச்சயம் பரிசீலனை செய்வார்கள் என்று நம்புகிறேன். ஒரு இடத்தை பெற்றுக் கொண்டு தேர்தலை சந்திக்கக் கூடாது என்பதுதான் கட்சியின் பெரும்பான்மை மக்களின் கருத்து.
திமுக எங்களிடம் இதுவரை அப்படி சொல்லவில்லை. ஒருவேளை அப்படி கூறினால், கட்சியின் பொதுக்குழுவை கூட்டி உரிய முடிவுகளை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். வடமாவட்டங்களில் விஜய்யின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படும் சூழலில், தவாகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படுமா என்ற கேள்வி பல்வேறு தரப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.
-
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
3 மாதங்களில் கோவில் பிரசாதத்தை அரசே தயாரித்து விற்கும்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு












Click it and Unblock the Notifications