சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக கூட்டணிக்குள் தனி அணி- இடதுசாரிகள், விசிக மட்டும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளான இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகியவை மட்டும் தனியாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., சிபிஐ (எம்.எல்.லிபரேசன்) மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டி ருக்கிறது. இதனால் ஏற்கனவே வறுமையில் உள்ள மக்கள் பட்டினிக் கொடுமைக்கு ஆளாகி யுள்ளார்கள். முன்னெப்போதும் இல்லாத அள விற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. ஆனால் மோடி அரசாங்கமோ எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி வருகிறது.

DMK Alliances to hold protest against Centre

கடந்த ஓராண்டில் மட்டும் பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலை கள் 70 சதவீதம் உயர்ந்துள்ளன. காய்கறி, தானி யங்கள், உணவு எண்ணெய் விலை என அனைத்துமே அதிகரித்துள்ளது. நிலக்கரி பற்றாக் குறைக்கு வழிவகுத்த அரசின் கொள்கைகளால் இப்போது மின்சார உற்பத்தியும் பாதித்துள்ளது. மோடி அரசின் நாசகர கொள்கைகளுக்கு எதிராகவும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்திடவும் மே 25 முதல் மே 31 வரை தேசம் தழுவிய அளவில் இயக்கம் நடத்திட வேண்டுமென இடதுசாரி கட்சி கள் விடுத்துள்ள அறைகூவலின் அடிப்படையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்எல்) ஆகிய கட்சிகளின் சார்பில் கண்டன இயக்கம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல்-டீசல்-சமையல் எரிவாயு பொருட் கள் மீதான வரிகளை கைவிட்டு, விலை உயர்வு களை மொத்தமாக திரும்பப் பெற்றிடு! பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் நியாய விலை கடைகளில் வழங்கிடு! வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 வழங்கிடு! ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயர்த்து! வேலை வாய்ப்பை பெருக்கிடுக!நகரப்புற வேலை உறுதிச் சட்டம் கொண்டு வருக! வேலையில்லா கால நிவாரணம் அளிப்பதற் கான மத்திய சட்டத்தை நிறைவேற்றுக! அரசுத்துறையில் காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பிடுக!

அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பிச்சு எடுக்கும்.. இன்று எங்கெல்லாம் பெய்யும்? ரிப்போர்ட் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பிச்சு எடுக்கும்.. இன்று எங்கெல்லாம் பெய்யும்? ரிப்போர்ட்

இதுதொடர்பாக மே 17 அன்று நடைபெற்ற கூட்டத்தில், தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் 2022 மே 26-27 ஆகிய தேதிகளில் ஒன்றிய, நகர, வட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்து வது எனவும், 2022 மே 25-31 ஆகிய தேதிகளில் வீடு, வீடாக துண்டு பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வியக்கத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டுமென கட்சி அணிகளை கேட்டுக் கொள்வ தோடு, பொதுமக்களும் பேராதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
DMK Alliances Left Parites and VCK will hold protest against Centre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X