"ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீயசக்தி" அரசு பேருந்தின் டிஜிட்டல் போர்டில் சர்ச்சைக்குரிய வாசகம்!
சென்னை: தமிழக அரசுப் பேருந்தின் டிஜிட்டல் போர்டில் ஓம் சக்தி, பராசக்தி.. திமுக ஒரு தீயசக்தி என்று வாசகம் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் கொளத்தூர் கொத்து பரோட்டா ஸ்டாலின் அங்கிள், எங்க உங்க அப்பாவை காணோம் என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. டிஎன்எஸ்டிசி பேருந்தில் இப்படியான வாசகங்கள் இடம்பெற்றிருப்பது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்த பின்னரும் கூட தொடர்ச்சியாக திமுகவை விஜய் சீண்டியும், சாடியும் வருகிறார். அதேபோல் சட்டசபையில் திமுகவினர் எந்த கேள்வி கேட்டாலும் கொளத்தூரில் கொத்து பரோட்டா, எங்க உங்க அப்பாவை காணோம் என்றே தவெக அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

அதேபோல் இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் கூட திமுகவை ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என்றே முதல்வர் விஜய் சாடினார். மறுபக்கம் அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலினை குறி வைத்து பாத்ரூம் லீடர் என்று மோசமான ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது மக்கள் மத்தியில் இந்த வாசகங்களை பிரபலபடுத்த தவெக புதிய முயற்சிகளை கையாண்டு வருகிறது. அதாவது அரசுப் பேருந்தில் டிஜிட்டல் போர்டுகளில் வழக்கமாக ஊர் பெயர்கள் இடம்பெறும். அதேபோல் மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தின் கீழ் விடியல் பேருந்து, வெற்றிப் பயணம் என்ற வாசகங்கள் இடம்பெறும்.
ஆனால் டிஎன்எஸ்டிசி பேருந்தின் டிஜிட்டல் போர்டில் ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி.. கக்கூஸ் லீடர் உதயநிதி, கொளத்தூர் கொத்து பரோட்டா ஸ்டாலின் அங்கிள், எங்க உங்க அப்பாவை காணோம் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. அந்த பேருந்து திருச்சி - புதுச்சேரி ரூட்டில் பயணிக்கிறது. இதன் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பேருந்தின் டிஜிட்டல் போர்டை தங்களின் சுயலாபத்திற்காக தவெக பயன்படுத்த தொடங்கி இருப்பது கடுமையான எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது. இதனால் திமுகவினரும் கொந்தளித்து வருகின்றனர். எதிர்க்கட்சிக்கு எதிராக இப்படியொரு மோசமான விஷயங்களை தவெக செய்ய தொடங்கி இருப்பது கேவலம் என்றும், முகம் சுழிக்க வைப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
