10 மா.செ பதவிநீக்கம்.. தங்கம் தென்னரசு குழுவுடன் ஆலோசித்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக செயற்குழு கூட்டம் முடிவடைந்த பின், மறுசீரமைப்பு பணிகள் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. நேற்று மாலை முதல் இரவு வரை ஸ்டாலின் அமைத்த மறுசீரமைப்பு பரிந்துரை குழுவுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இதனால் செயற்குழு கூட்டம் முடிவடைந்த பின் திமுகவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பேச்சுகள் எழுந்துள்ளன.

திமுகவின் தலைமை செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பின்னணியில் திமுக மறுசீரமைப்பு நடவடிக்கைகளே காரணம் என்று தெரிய வந்துள்ளது. நேற்று மாலை முதல் இரவு வரை தங்கம் தென்னரசு தலைமையிலான மறுசீரமைப்பு பரிந்துரைக் குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

DMK

ஏற்கனவே மறுசீரமைப்பு தொடர்பாக இந்த குழு அறிக்கை சமர்ப்பித்த சூழலில், அடுத்தக் கட்ட ஆலோசனை நடைபெற்று இருக்கிறது. இதன்படி திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 100ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது திமுகவில் 78 மாவட்டச் செயலாளர்கள் இருக்கின்றனர். இதில் செயல்படாத மாவட்டச் செயலாளர்கள் சுமார் 10 பேரை பதவி நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு பதிலாக மாற்று பொறுப்புகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் தற்போதைய மாவட்டச் செயலாளர் 2 முதல் 6 தொகுதிகள் வரை பொறுப்பாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். இதனை குறைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு மாவட்டச் செயலாளர் கட்டுப்பாட்டில் 3 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கஒப்பட்டிருக்கிறது.

இதன் மூலமாக சீனியர்களின் ஆதிக்கத்தை ஒரு பக்கம் குறைக்க முடியும் என்பதோடு, இளைஞர்கள் மற்றும் பெண்களை அந்தப் பொறுப்புக்கு கொண்டு வர முடியும். அதேபோல் துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். இன்னொரு பக்கம் கட்சியில் புதிதாக இணைந்த ஓபிஎஸ் உள்ளிட்டவர்களுக்கும் பதவி கொடுக்க திமுக தலைமை ஆயத்தமாகி உள்ளது.

இதன் மூலமாக இளைஞர்கள் மற்றும் சீனியர்களுக்கு இடையில் எந்தவித மோதல் போக்கும் இல்லாமல் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்று திமுக தலைமை நம்புகிறது. இதுதொடர்பான அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளதாக அறிவாலய வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+