1962 முதல் 2026 வரை.. சட்டசபை தேர்தல்களில் திமுக பெற்ற வாக்கு சதவீதம், வெற்றி இடங்கள்!
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ள திமுக, பல தேர்தல்களில் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளது. 1967 முதல் 2026 சட்டசபை தேர்தல் வரை திமுக பெற்ற வெற்றி இடங்களும் (Seats), வாக்கு சதவீதமும் (Vote Share) என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
திமுக முதன் முதலில் அண்ணா தலைமையில் 1967 ஆம் ஆண்டு ஆட்சி அரியணை ஏறியது. அதன்பிறகு கருணாநிதி தலைமையில் 1971-ல் 184 இடங்களை வென்று சாதனை படைத்தது. தொடர்ந்து 1989, 1996, 2006 எனப் பல்வேறு காலகட்டங்களில் திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

திமுகவின் மோசமான தோல்வி
திமுகவுக்கு மோசமான தோல்வி என்று பார்த்தால் 1991-ம் ஆண்டு தேர்தல் தான். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மரணத்திற்குப்பின் நடைபெற்ற அந்தத் தேர்தலில், திமுக வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் அப்போது கூட கட்சித்தலைவரக இருந்த கருணாநிதி வெற்றி பெற்றார்.
ஆனால் அதற்கு பின் அடுத்த 1996 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்ட்டெழுந்து 173 தொகுதிகளில் வெற்றி பெற்று கருணாநிதி முதல்வர் ஆகியிருந்தார். அதே போல 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக 23 இடங்களை பெற்று இருந்தது. தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் திமுக மட்டும் 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
திமுக தன் முதல் தேர்தலில் இருந்து தற்போது நடந்து முடிந்துள்ள 2026 சட்டசபை தேர்தல் வரை பெற்ற வாக்கு சதவீதம் மற்றும் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்ற விவரங்களை காணலாம்.
திமுகவின் தேர்தல் பயணம்:
1962ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக 50 இடங்களை கைப்பற்றி 27.1% வாக்குகளை பெற்றது. இதனைத் தொடர்ந்து 1967ஆம் ஆண்டு 137 இடங்களுடன் 40.7% வாக்கு பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 1971இல் கட்சியின் உச்ச சாதனையாக 184 இடங்களும் 48.6% வாக்குகளும் கிடைத்தன.
ஆனால் 1977 தேர்தலில் கட்சி 48 இடங்களுக்கும், 24.9% வாக்குகளுக்கும் குறைந்தது. 1980 மற்றும் 1984 தேர்தல்களில் முறையே 37 (22.1%) மற்றும் 24 (23.5%) இடங்களை மட்டுமே பெற்றது.
1989ஆம் ஆண்டு திமுக மீண்டும் எழுச்சி பெற்று 150 இடங்களையும் 33.2% வாக்குகளையும் பெற்றது. ஆனால் 1991 தேர்தலில் கடுமையான சரிவு ஏற்பட்டது; வெறும் 2 இடங்களும் 22.5% வாக்குகளும் மட்டுமே கிடைத்தன.
1996ஆம் ஆண்டு மீண்டும் பெரிய வெற்றியைப் பதிவு செய்து 173 இடங்களையும் 42.1% வாக்குகளையும் பெற்றது. பின்னர் 2001இல் 31 (30.9%), 2006இல் 96 (26.5%) இடங்கள் கிடைத்தன.
2011 தேர்தலில் 23 இடங்களுடன் 22.4% வாக்குகளாக குறைந்த திமுக, 2016இல் 89 இடங்களையும் 31.6% வாக்குகளையும் பெற்று மீண்டது. 2021 தேர்தலில் 133 இடங்களும் 37.7% வாக்குகளும் பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
வெற்றி இடங்கள் (வாக்கு சதவீதம்)
* 1962 - 50 (27.1%)
* 1967 - 137 (40.7%)
* 1971 - 184 (48.6%)
* 1977 - 48 (24.9%)
* 1980 - 37 (22.1%)
* 1984 - 24 (23.5%)
* 1989 - 150 (33.2%)
* 1991 - 2 (22.5%)
* 1996 - 173 (42.1%)
* 2001 - 31 (30.9%)
* 2006 - 96 (26.5%)
* 2011 - 23 (22.4%)
* 2016 - 89 (31.6%)
* 2021 - 133 (37.7%)
* 2026 - 59 (24.19)
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications