இது லிஸ்ட்லயே இல்லையே! வட மாவட்டங்களில் அடி வாங்கும் திமுக! தென் மாவட்டங்கள் மட்டும் கொஞ்சம் ஓகே!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், வட மாவட்டங்களில் திமுக அமைச்சர்கள் கடுமையான பின்னடைவை சந்தித்திருக்கும், தென் மாவட்டங்களில் ஓரளவு திமுக அதிமுக புள்ளிகள் தங்களது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 36 அமைச்சர்களின் 20 அமைச்சர்கள் பின்னடைவை சேர்ந்திருக்கும் நிலையில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து அமைச்சர்கள் மட்டுமே தங்களது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் களம். திமுக தனிப் பெரும்பான்மை பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில் அவற்றை தவிடு பொடியாக்கி இருக்கிறது தமிழக வெற்றி கழகம்.

தற்போதைய சூழலில் சுமார் 100 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருக்கிறது பெரும் எதிர்பார்ப்புக்கிடையே சென்னையில் 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருக்கிறது. வட மாவட்டங்களில் செல்வாக்கோடு இருந்த பல அமைச்சர்கள் தோல்வி முகத்தை கண்டிருக்கின்றனர்.
தற்போதைய தகவல் படி 36 அமைச்சர்களில் 21 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்திருக்கின்றனர். அதிர்ச்சி தரும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு ,அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோரும் பின்னடைவை சந்தித்திருக்கின்றனர்.
தென்மாவட்டங்களை பொறுத்தவரை அதிமுக பல தொகுதிகளில் முன்னேறி இருக்கிறது, திமுகவில் அமைச்சர்கள் ஐ பெரியசாமி,சக்கரபாணி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், மூர்த்தி உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டுமே தற்போது முன்னிலை வகித்து வருகின்றனர்.;
அதிமுக தரப்பில் திண்டுக்கல் சீனிவாசனை தவிர பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் முன்னிலை வகிக்கின்றனர். குறிப்பாக மதுரையில் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் முன்னிலை வைக்கின்றனர். அதிர்ச்சி தரும் விதமாக மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நடிகர் சுந்தர் சியை விட பின்னடைவில் இருக்கிறார். தென் மாவட்டங்களில் அதிமுக திமுக வலுவாக இருந்த நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகம் அந்த இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications