பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா.. 2வது மனைவிக்கும் முக்கியத்துவம் தாங்க! பேத்தி கோரிக்கை!
சென்னை : திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அறிவாலயத்தில் பேராசிரியர் புகைப்பட கண்காட்சியில் அவருக்கு மனைவியாக வாழ்ந்த என் பாட்டி மருத்துவர் திருமதி சாந்தகுமாரி அன்பழகன் அவர்களின் படம் ஒன்று கூட அங்கு இல்லை என அவரது பேத்தி பேஸ்புக்கில் கோரிக்கை விடுத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நிழல் போல இருந்த அவரது நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி திமுக சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்பட்டது.

பேராசியர் அன்பழகன்
இதேபோல சென்னை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் பேராசிரியர் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பேராசிரியர் அன்பழகன் புகைப்படக் கண்காட்சியில் 60 வருடங்களுக்கு மேல் அவருடன் வாழ்ந்த சாந்தகுமாரி அன்பழகன் படம் வைக்கப்படவில்லை என அவரது பேத்தி கூறி இருக்கிறார். பேராசிரியர் அன்பழகனின் முதல் மனைவி வெற்றிச் செல்வி. அவர் மறைவுக்குப் பின்னர் சாந்தகுமாரியை திருமணம் செய்து கொண்டார். அன்பழகன் - சாந்தகுமாரி தம்பதியினருக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு, ஜெயக்குமாரி ஆகியோர் பிறந்தனர்.. இந்நிலையில் அன்பழகனின் மனைவி சாந்தகுமாரியும் இறந்துவிட்டார்.

சாந்தகுமாரி அன்பழகன்
இந்நிலையில் அவரது பேத்தி கயல்விழி லக்ஷ்மணன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்," எங்கள் தாத்தாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறிவாலயத்தில் பேராசிரியர் புகைப்பட கண்காட்சி நாளை வரை நடைபெறுகிறது.. நானும் என் அக்கா அழைப்பின் பேரில் அந்த கண்காட்சியய் கான சென்றோம்.. எல்லாம் நன்றாக தான் இருந்தது, ஆனால் ஒரு வருத்தம் மேலோங்கி இருக்கிறது. காரணம் 60 வருடத்திற்கு மேல் அவருக்கு மனைவியாக வாழ்ந்த என் பாட்டி மருத்துவர் திருமதி சாந்தகுமாரி அன்பழகன் அவர்களின் படம் ஒன்று கூட அங்கு இல்லை

கோவமும் வருத்தமும்..
இதனால் கொஞ்சம் கோவமும் வருத்தமும் மேலோங்கியே இருக்கிறது எனக்கு.. முதல் மனைவி இறந்த பிறகே என் பாட்டியை மணந்தார். 60 வருடத்திற்கு மேல் இனை பிரியா தம்பதிகளாக வாழ்ந்தார்கள், பேராசிரியரின் ஒவ்வொரு சாதனைக்கு பின்பும் என் பாட்டியின் தியாகம் சொல்லி மாளாது.. அவரை புறக்கனிக்க என்ன அவசியம், அவர்களின் வாரிசுகளாகிய நாங்கள் கட்சியில் எந்த பதவிக்கும் பங்கு கேட்கவில்லை எங்களுக்கு தேவையும் இல்லை என் பாட்டி அவரின் இரண்டாவது மனைவி என்பதால?

கோரிக்கை
ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தன் சகோதிரி கனிமொழி அவர்களின் தாயாருக்கே அவ்வளவு மரியாதையும் மதிப்பும்.கொடுப்பவர் எப்படி இதை செய்யாமல் போனார். என் பாட்டியின் இறப்புக்கு அன்று நாள் முழுவதும் கூடவே இருந்து சுடு காடு வரை நடந்து வந்து எல்லா காரியத்திலும் என் பாட்டியின் மகனை போலவே ஈடுபாட்டுடன் காரியங்களை நடத்தி கொடுத்தார்.. அப்படி இருக்க முதல்வர் எப்படி எங்கள் பாட்டியய் புறக்கனித்தார்...ஏற்று கொள்ள முடியவில்லை எங்களால்" என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications