அதிமுக அரசு கெண்டு வந்த முக்கிய திட்டம்.. மூட முடிவு செய்த திமுக அரசு? மா சுப்பிரமணியன் சூசகம்
சென்னை: அம்மா மினி கிளினிக்கிற்கு தற்போது அவசியம் இல்லை என்று கூறி இழுத்து மூட செய்துள்ளது திமுக அரசு. இதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, அம்மா மினி கிளினிக்கிற்கு தற்போது அவசியம் இல்லை என்றும் அம்மா மினி கிளினிக், அம்மா உப்பு, அம்மா காய்கறிகள் அங்காடி, அம்மா கூட்டுறவு அங்காடி போன்றவை விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்டவை என்று கூறினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட திட்டம் அம்மா மினி கிளினிக் திட்டம். இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது விமர்சனங்கள் எழுந்தன.
தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் தொடங்கப்படும். ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் இடம்பெற்றார்கள். இந்நிலையில் அவசர காலத்தில் தேர்தலுக்காக ஆரம்பிக்கப்பட்டதாக திமுக கடும் விமர்சனம் செய்தது.

எப்படி கட்டமைப்பு
ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே ஆரம்ப சுகாதார மையங்கள் சுகாதாரக் கட்டமைப்பில் வலுவாக இருந்தன. கிராமத்து மக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் அமைந்த இந்தக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு இருந்தது. அதிக அளவில் புறநோயாளிகள் வந்துசெல்லும் ஆரம்ப சுகாதார மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டுவந்தன. மருத்துவர், செவிலியர் தவிர ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பணியாளர்களும் இருக்கிறார்கள் . சில ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதிகளும் உள்ளன.

இழுத்து மூடல்
இந்நிலையில் கடந்தஅதிமுக அரசால் வேகவேகமாகத் தொடங்கப்பட்டுவரும் மினி கிளினிக், ஏற்கெனவே இருக்கும் இந்தக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற ஐயமும் எழுந்தது. மேலும் அப்போது ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் தொடங்கி வைத்த க ட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களும் நடந்தன. மேலும் புதிய மருத்துவமனைகளுக்கு மருத்துவர்களோ செவிலியர்களோ பணிநியமனம் செய்யப்படாமலேயே கிளினிக் குறித்த அறிவிப்பு வெளிவந்ததால் விமர்சனங்களும் எழுந்தன. இது சரியான திட்டம் அல்ல என்றே அப்போது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் அம்மா மினி கிளினிக்கிற்கு தற்போது அவசியம் இல்லை என்று கூறி திமுக அரசு இழுத்து மூட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மக்களை தேடி மருத்துவம்
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகக் கூட்டரங்கில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, தமிழக முதல்வர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார். அதன்படியே செய்து வருகிறார்கள். மக்களைத் தேடி மருத்துவம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தினந்தோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பயனாளிகளைக் கண்டறிந்துள்ளோம். அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்ப்பதும், மருந்துகள் அளிப்பதுமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகக் கூட்டரங்கில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, தமிழக முதல்வர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார். அதன்படியே செய்து வருகிறார்கள். மக்களைத் தேடி மருத்துவம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தினந்தோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பயனாளிகளைக் கண்டறிந்துள்ளோம். அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்ப்பதும், மருந்துகள் அளிப்பதுமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற் வருகிறது.

நாளை தொடக்கம்
அண்மையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 அறிவிப்புகள் மருத்துவத் துறையின் சார்பில் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்புகளில் மிகவும் பிரதானமான திட்டம் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தான். இத்திட்டம் 2006ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் பூவிருந்தவல்லி அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டது. 2011-க்குப் பிறகு கடந்த ஆட்சியாளர்களால் இத்திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்தச் செயல்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் முதல்வரின் சீரிய வழிகாட்டுதலின்படி நாளை (29-9-2021) சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. கூட்டத்தொடரில் இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 1000 மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் மொத்தம் 385 வட்டாரங்கள் இருக்கின்றன. இந்த வட்டாரங்களில் ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் நடத்தினாலும் ஆண்டுக்கு 1,155 முகாம்கள் நடத்தப்பட வேண்டும். மாநகராட்சிகள் மொத்தம் 21 உள்ளன. ஒரு மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 4 வீதம் 80 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆண்டுக்கு 15 மருத்துவ முகாம்கள் எனச் சேர்த்து ஆண்டுதோறும் 1,240 மாபெரும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இம்மருத்துவ முகாம்களுக்கான தொடக்க விழாவை முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்குத் தொடங்கி வைக்கிறார்.

எப்படி நடக்கும்
இம்மருத்துவ முகாம்களில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்குப் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், குடல் நோய் மருத்துவர், குழந்தை நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர், தோல் நோய் மருத்துவர், இருதய நோய் மருத்துவர், சிறுநீரக நோய் சிறப்பு மருத்துவர், நரம்பியல் மருத்துவர், சித்த மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் இயன்முறை மருத்துவர், முதியோர் நலன் உள்ளிட்ட பதினாறு சிறப்பு மருத்துவர்களால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிறப்பான சிகிச்சைகள் உயர் மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்யப்பட உள்ளன.

அவசியமில்லை
அம்மா மினி கிளினிக்கிற்குத் தற்போது அவசியம் இல்லை. முன்னாள் முதல்வர் கூட அம்மா மினி கிளினிக்தான் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்று ஒப்புதல் அளித்திருக்கிறார். நான் சட்டப்பேரவையில்கூட அம்மா மினி கிளினிக்குகள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினேன். விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்டவைதான் அவை. அம்மா உப்பு, அம்மா காய்கறிகள் அங்காடி, அம்மா கூட்டுறவு அங்காடியில் மருந்து மாத்திரைகள், அம்மா அங்காடியில் அரிசி என்றெல்லாம் ஆரம்பித்தார்கள். ஆனால், அவை ஆரம்பித்ததோடு சரி. இப்போதும் எங்கும் அவை இயங்கவில்லை. இவை விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்டவைதான்'' இவ்வாறு மா சுப்பிரமணியன் கூறினார். அம்மா மினி கிளினிக்கிற்குத் தற்போது அவசியம் இல்லை. முன்னாள் முதல்வர் கூட அம்மா மினி கிளினிக்தான் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்று ஒப்புதல் அளித்திருக்கிறார். நான் சட்டப்பேரவையில்கூட அம்மா மினி கிளினிக்குகள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினேன். விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்டவைதான் அவை. அம்மா உப்பு, அம்மா காய்கறிகள் அங்காடி, அம்மா கூட்டுறவு அங்காடியில் மருந்து மாத்திரைகள், அம்மா அங்காடியில் அரிசி என்றெல்லாம் ஆரம்பித்தார்கள். ஆனால், அவை ஆரம்பித்ததோடு சரி. இப்போதும் எங்கும் அவை இயங்கவில்லை. இவை விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்டவைதான்'' இவ்வாறு மா சுப்பிரமணியன்.












Click it and Unblock the Notifications