பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது திமுக.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Recommended Video
சென்னை: வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் இந்தியன் பேக் (ஐபேக்) நிறுவனம் திமுகவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அரசியல் கலை வித்தகர் என அரசியல் கட்சிகளால் போற்றப்படுபவர் பிரசாந்த கிஷோர். இவர் இந்தியன் பேக் சுருக்கமாக ஐபேக் ( இந்திய அரசியல் நடவடிக்கைக் குழு _ Indian Political Action Committee) என்ற பெயரில் அர்சியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கும் பணியினை செய்து வருகிறார்.

பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தான் முதல்முறையாக 2014ல் நாடாளுமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக சந்தித்தது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதீஷ்குமாருக்காக பணியாற்றினார். அதில் நிதீஷ் வெற்றி பெற்றார். அதன்பிறகு ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்காக பணியாற்றினார். இதன் காரணமாக ஜெகன் பெரும் வெற்றி பெற்று முதல்வராக உள்ளார். இன்னும் சில மாநிலங்களிலும் தேர்தல் வியூக வேலைகளை பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் செய்துள்ளது. எல்லாவற்றிலும் வெற்றிகளை குவித்துள்ளது.
Happy to share that many bright & like-minded young professionals of Tamil Nadu are joining us under the banner of @IndianPAC to work with us on our 2021 election and help shape our plans to restore TN to its former glory!
— M.K.Stalin (@mkstalin) February 2, 2020
இந்நிலையில் 2021ம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக இப்போது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் வேலை செய்து வருகிறது.
இந்த சூழலில் தமிழகத்தில் முதல்முறையாக ஐபேக் நிறுவனத்துடன் திமுக கைகோர்த்துள்ளது. வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் இணைந்து பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் பணியாற்ற உள்ளதாக என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications