’பாரம்பரிய பத்திரிகைகள்’ ஆசையில் மண் விழுந்துருச்சே! பொதுக்குழுவில் சீண்டிய ஸ்டாலின்! பரபர பின்னணி!
சென்னை : திமுக உட்கட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ள நிலையில், 'திமுகவின் வன்முறைக் கலாச்சாரத்தை' என்று எழுதலாம் என்று துடித்த சில பாரம்பரிய பத்திரிக்கைகளின் ஆசையில் மண் விழந்துள்ளதாக திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது உட்கட்சி பொதுத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் ஒன்றிய, நகர ,பேரூர் மற்றும் பகுதி கழக செயலாளர் மாவட்ட, மாநகர கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களுக்கும் வேட்பு மனு தாக்கல் ஏழாம் தேதி வழங்கப்பட்டது. அப்போது திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.

திமுக பொதுக்குழு கூட்டம்
இந்நிலையில் திமுக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்ஸ் கான்வென்சன் சென்டரில் நடைபெற்றது.திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆற்காடு வீராசாமி தேர்தல் நடத்தும் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில் தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாததால் இரண்டாவது முறையாக திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

உட்கட்சி மோதல்
முன்னதாக திமுகவில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் பல மாவட்டங்களில் மோதல் ஏற்பட்டது சில இடங்களில் அடிதடி வரை சென்றது. திருச்சி ராமநாதபுரம் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்வாகிகள் வெளிப்படையாகவே மோதல் போக்கை கையாண்டனர். இன்னிலையில் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் விவகாரங்களை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாகவே பேசினார்.

அமைதியாக தேர்தல்கள்
நிகழ்ச்சியில் பேசிய அவர்,"அமைதியாக தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. தலைமைக் கழகத்தின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு- தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதல் படி- கிளைக் கழகம் முதல் பகுதிக் கழகம் வரையிலான தேர்தல்களை அமைதியாக நடத்திய தலைமைக் கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவர்க்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில இடங்களில் வாக்குவாதங்கள்- மனவருத்தங்கள் இருந்தாலும்- அதனை அமைதியாகச் சமாளித்து தேர்தலை நடத்தி முடித்து தலைமைக்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள்.

பாரம்பரிய பத்திரிக்கைகள்
பார்த்தீர்களா... தி.மு.க.வின் வன்முறைக் கலாச்சாரத்தை!" என்று எழுதலாம் என்று துடித்த சில பாரம்பரிய பத்திரிக்கைகளின் ஆசையில் மண் விழ - நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர்களின் பதவிப் போட்டிகள் சுமுகமாக முடிந்தன. உடனே, 'தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை' என்று எழுதத் தொடங்கி விட்டார்கள். என்னை விட - உங்களை விட - இந்த நாட்டில் சில பத்திரிக்கைகள் அதிகப்படியான தி.மு.க. பாசம் கொண்டு செயல்படுவதைப் பார்த்து இதைப் படிப்பவர்கள்தான் பாவம், தலைசுற்றிக் கீழே விழுவார்கள் " என கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ












Click it and Unblock the Notifications