• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சத்தமே இல்லாமல் "அவர்" வந்துட்டு போனாராமே.. ஸ்டாலினை பற்றிகூட பேசவில்லையாமே.. அவ்வளவுதானா..?

|

சென்னை: எத்தனையோ யூகங்கள், சந்தேகங்கள் வலம் வந்த நிலையில். சத்தமே இல்லாமல் வந்து, ஓட்டுப்போட்டு போயுள்ளார் முக அழகிரி..!

வடமாநிலங்களில் உழைப்பாலும், தந்திரத்தாலும், வியூகங்களாலும், வளைத்து போட்ட பாஜக, தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவில் மட்டும் கால் வைக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறது.

கடந்த முறை எம்பி தேர்தலின்போதே அமித்ஷா சென்னை வந்தபோது, "என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது.. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீர வேண்டும்" என்று சொல்லி விட்டு போனார்.. அதற்கு பிறகு எத்தனையோ எடுக்கப்பட்ட ஆப்ஷன்களில் ஒன்றுதான் முக அழகிரி.

மென்மை

மென்மை

மென்மையும், அன்பான குணத்தையும் கொண்ட அழகிரி, எந்த அடிமட்ட தொண்டர்கள் என்றாலும் இறங்கி போய் பேசுபவர்.. உழைப்பவர்கள் மேலே வர வேண்டும் என்று மனசார விரும்புவர்... அப்படி எத்தனையோ தொண்டர்களை மேலே கைதூக்கி விட்டவர்.. இவர் மத்திய அமைச்சராக இருந்தபோதும், பலரது அன்பை எளிதாக பெற்றார்.. அந்த வகையில், பாஜக தலைவர்களுக்கும் அழகிரியை எப்போதுமே ரொம்ப பிடிக்கும்.

 நிதிஉதவி

நிதிஉதவி

இவரை வைத்து பலவித முயற்சிகளை பாஜக மேற்கொண்டதாக சொல்லப்பட்டது.. தனிக்கட்சி ஆரம்பிக்க சொல்லியும், அதற்கு நிதி உதவி தரப்போவதாகவும் சொல்லியது... பிறகு அழகிரி மகனுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி தர தயாராக இருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.. எத்தனையோ ஆசை வார்த்தைகள் கூறப்பட்டும் அழகிரி பாஜகவுக்கு ஆதரவாக இதுவரை எதுவுமே செய்யவில்லை என்பதே உண்மை.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்த பக்கம் திமுகவை எடுத்து கொண்டால், அழகிரியும் - ஸ்டாலினும் விரைவில் இணையக்கூடும் என்கிறார்கள்.. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என்பார்களே, அது மாதிரி, அழகிரியை உள்ளே இழுத்துபோட்டால், பல வகைகளில் நன்மை கிடைக்கும் என்று திமுக தரபபு கருதுவதாகவும் சொல்லப்பட்டது. கலைஞர் இருக்கும்போதுகூட இப்படித்தான், அழகிரி இருந்தால், தென்மாவட்டங்களை பற்றி எப்போதுமே கவலைப்பட மாட்டார்.. அந்தவகையில், அழகிரியை திமுகவில் இணைக்க முடிவானதாகவும் செய்திகள் வந்தன..

 கண்டிஷன்கள்

கண்டிஷன்கள்

அவரை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் குடும்பத்தில் சிலர் இறங்கினார்கள் என்றும், அப்போது அழகிரி 2 கண்டிஷன்களை முன்வைத்தாகவும் சொல்லப்பட்டது. ஒன்று, மகனுக்கு கட்சியில் நல்ல பதவி வேண்டும், இன்னொன்று, திமுக அறக்கட்டளையில் தன்னை உறுப்பினராக்க வேண்டும் என்ற கண்டிஷன்களை போட, அதற்கு திமுக தரப்பில் என்ன சொன்னார்கள் என்றே தெரியவில்லை.

பாஜக

பாஜக

இப்போது விஷயம் என்னவென்றால், ரஜினி கட்சியில் அழகிரி இணைகிறார் என்றார்கள்.. கடைசியில் ரஜினியே கட்சி ஆரம்பிக்கவில்லை.. திமுகவை டேமேஜ் செய்ய, பாஜக பக்கம் தாவுவார் அல்லது பாஜகவுக்கு அழகிரி ஆதரவு தருவார்கள் என்றார்கள்.. அப்படி எதையுமே செய்யவில்லை.. திமுகவில் இணைந்து தென்மண்டலத்தை வாரி சுருட்டி வெற்றிக்கு பாடுபடுவார்கள் என்றார்கள்.. அந்த மாதிரியும் எதையும் செய்யவில்லை..

வெற்றி

வெற்றி

தனி கட்சி ஆரம்பிக்க போகிறார் அழகிரி என்றார்கள்.. அப்படி எதையும் ஆரம்பிக்கவில்லை. ஸ்டாலின் மீதுள்ள அதிருப்தியால் திமுக வெற்றியை குலைக்க ஏதாவது வியூகம் அமைப்பார் என்றார்கள், அப்படியும் இல்லை. பிரச்சாரத்தில் இறங்கி, பொதுவான நபர் யாருக்காவது ஓட்டு கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அதுவும் இல்லாமல் போய்விட்டது.

அமைதி

அமைதி

இப்போது, தேர்தலே முடிந்துவிட்டது.. நேற்று அமைதியாக வந்து ஓட்டு போட்டுவிட்டு போயுள்ளார்.. மனைவி காந்தியுடன், டிவிஎஸ் நகரில் உள்ள டிவிஎஸ் லட்சுமி மெட்ரிக் பள்ளியில், தன் ஓட்டை பதிவு செய்திருக்கிறார்.. வழக்கமாக, திமுகவுக்கு எதிராக குறைந்தபட்சம் ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அழகிரி அதையும் சொல்லவில்லை.. ஆக மொத்தம் அழகிரியை பொறுத்தவரை இன்னொரு ரஜினி தான் என்றாலும், திமுகவுக்கு எதிரான காரியத்தை இப்போது மட்டுமல்ல, எப்போதுமே கருணாநிதியின் மகன் செய்ய மாட்டார் என்பது மீண்டும் தெளிவாகிறது.

 
 
 
English summary
DMK MK Azhagiri did not comment against MK Stalin
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X