• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கமல் கூறிய அதே வார்த்தையில் .. பாஜகவிற்கு கடும் பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

சென்னை: நீட் பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது கடும் மன உளைச்சலையும் - வேதனையையும் தருகிறது. நீட் என்பது துரோகமும் - சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஒன்றியத்தின் நீட் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வாகாது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்த சேலம் மேட்டூரைச் சேர்ந்த மாணவர் தனுஷ், நீட் தேர்வு நடைபெற்ற நாள் காலை திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கருணாநிதி என்பவரது மகள் கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மார்க் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி கனிமொழி நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதிய நிலையில் தோற்றுவிடுவோம் என்ற பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

இதனிடையே ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய திமுக, ஆட்சிக்கு வந்த பின்னர் ஏன் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி அதிமுக , மநீம, பாஜக உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

சட்டப்பேரவையில் சிக்ஸர்... முதலிடத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி... பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சிக்ஸர்... முதலிடத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி... பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்..!

வெற்று முழக்கம்

வெற்று முழக்கம்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் காட்டமாக கடந்த ஞாயிறு அன்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், :தமிழ் நாட்டில் நீட் தேர்வினை நடத்த விடமாட்டோம் என்று கூறிய விடியல் அரசின் வாய்ச்சவடாலால் மாணவச்செல்வத்தை இழந்து தவிக்கும் பெற்றோர். தி.மு.க. தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது மாநிலம் முழுவதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் என்று கூறியது. நீட்டை ரத்து செய்யும் வழிமுறைகள் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான திரு. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்று அவர்களது இளைஞர் அணித் தலைவர் முதல் கடைக்கோடி பேச்சாளர் வரை தேர்தல் மேடைகளில் அம்மா அரசிற்கு எதிராக வெற்று முழக்கமிட்டு, மக்களை திசை திருப்பி, தேர்தலில் வெற்றியும் பெற்றுவிட்டனர்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்


நான் கடந்த ஜூன் மாதம் சட்டசபையில், நீட் தேர்விற்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு நேரடியாக பதில் சொல்லுங்கள் என்று கேட்டேன். ஆனால், அதற்கு சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர்கள் மழுப்பலான பதிலை அளித்தார். மேலும் நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பரிந்துரையின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார். ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் நீட் தேர்வினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து அறிய அமைத்த குழு, உச்சநீதிமன்றத்தின் வரம்புக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த தி.மு.க. அரசு நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி மட்டுமே இந்தக் குழு ஆராயும் என்றும், இந்தக் குழுவின் பரிந்துரை நீட் தேர்வு நடைபெறுவதற்கு எந்தவிதமான இடையூறையும் / பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகவோ இந்தக் குழு அமைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது. மேலும், இது அரசின் கொள்கை முடிவு, இதற்கு எதிராக யாரும் மனுத் தாக்கல் செய்யமுடியாது என்றும், இந்த குழு அமைக்கப்பட்டதால் இந்த மனுதாரர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது.

பரிந்துரை

பரிந்துரை

மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த 14 பக்கத் தீர்ப்பில் இந்த அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள வாசகங்களை அப்படியே குறிப்பிட்டு, குழு அமைத்தது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதற்கு எதிரான இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் குழுவினுடைய பரிந்துரைகளை செயல்படுத்துவதன் மூலம், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தி.மு.க. அரசு குறிப்பிடவில்லை. உயர்நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் குழுவிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நிலையில், ஏதோ, அன்றே இந்த அரசு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டது போல ஸ்டாலின் வானத்திற்கும், பூமிக்கும் குதித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

பழி சுமத்தினர்

பழி சுமத்தினர்

தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும், அதற்கான வழி எங்களுக்குத் தெரியும் என்றும் வாய்வீரம் காட்டிய திரு. ஸ்டாலின், தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக """"பாதம் தாங்கிகள், எதிர்கட்சியானப் பிறகும் பி.ஜே.பி-யின் அடிமைகள்'' என்றெல்லாம் அரசியல் நாகரீகம் இன்றி, எங்கள் மீது பழி சுமத்தியுள்ளார். தேர்தலில் ஜெயிக்க, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, தேர்தலில் வெற்றிபெற்ற பின் தற்போது வாக்குறுதிகள் நிறைவேற்றாததற்கு காரணம், மாநிலத்தின் நிதிநிலை மோசம் என்று எப்போதும் போல் மற்றவர் தலையில் காரணத்தை சுமத்தும் இந்த அரசு, நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறாது, நீட்டை ஒழிப்பதற்கான வழிமுறைகள் எங்களுக்குத் தெரியும் என்று பொதுக்கூட்ட மேடையில் வாய்ச்சவடால் அளித்தவாறு, கேலிச் சிரிப்பு சிரித்தபடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் போடும் முதல் கையெழுத்தே நீட்டிற்கு எதிரானதுதான் என்று, மாணவச் செல்வங்களை வானத்தையே வில்லாக வளைப்போம் என்பது போல் ஏமாற்றும் விதத்தில் பேசியதன் விளைவு, நாம் இன்று மேலும் ஒரு மாணவச் செல்வத்தை நீட்டிற்கு தாரை வார்த்துள்ளோம்.

மாணவ செல்வங்கள்

மாணவ செல்வங்கள்

ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பான தலைவர், சமுதாயத்தில் எந்த ஒரு கருத்தையும் சொல்லும்போதும், அது சமுதாயத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்னென்ன என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து கூற வேண்டும். அதைவிடுத்து நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறாது, அதை தடுப்பதற்குண்டான வழிமுறைகள் எனக்குத் தெரியும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நாங்கள் இடும் முதல் கையெழுத்தே நீட்டிற்கு எதிரானதுதான் என்று மாணவச்செல்வங்களை ஏமாற்றும் விதத்தில் தேர்தல் சமயத்தில் பேசியதன் விளைவு, இன்று நாம் இன்னொரு மாணவச் செல்வத்தை பலி கொடுத்திருக்கிறோம் என கூறியிருந்தார்.

மேடை முழக்கம்

மேடை முழக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிறு அன்று வெளியிட்டிருந்த ட்வீட் பதிவில், ஓர் அநீதியான தேர்வை 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?! என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் இன்று வெளியிட்ட பதிவில், "ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!" என்று கடும் கோபத்துடன் கூறியுள்ளார்.

அப்பாவி மாணவர்கள்

அப்பாவி மாணவர்கள்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த பதிவில், ஆண்டுக்காண்டு தமிழக ஏழை மாணவர்கள் அதிகம் தேர்வு பெறும் உச்சநீதிமன்றம் பாராட்டும் NEET தேர்வு. மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளை திராவிட முன்னேற்ற கழகம் நிறுத்தட்டும்.
அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு" என்று கடுமையாக கூறியிருந்தார். இதனிடையே நேற்று மாலை வெளியிட்ட இன்னொரு பதிவில், நீட் தேர்வை 2010ல் கொண்டுவந்தது, காங்கிரஸ் திமுக கூட்டணி தான் என்றும், அப்போது திமுகவைச் சேர்ந்த காந்திராஜன் சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்தார் என்றும் கூறியுள்ளார்.

10லட்சம் நிவாரண நிதி

10லட்சம் நிவாரண நிதி

இதனிடையே திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், நீட் தந்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மேட்டூர் மாணவன் தனுஷின் வீட்டுக்குசென்று அவரின் உடலுக்கு மரியாதை செய்து பெற்றோருக்கு ஆறுதல் கூறினோம். இன்னோர் உயிர் போகாமல் காக்க அனைவரும் ஒன்றிணைந்து நீட் தேர்வை ரத்து செய்ய போராடுவோம் என்று கூறினார். அத்துடன் மாணவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை அளித்தார்.

உதயநிதி பதிலடி

உதயநிதி பதிலடி

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து உதயநிதி ஸ்டாலின் ஞாயிறு அன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், அதிமுக ஆட்சியில் நீட் தேர்வால் 14 மாணவர் உயிரிழந்த நிலையில் தற்போது தனுஷ் உயிரிழந்துள்ளார். ஆனாலும், ஒன்றிய அரசை நடத்துகிற-அதிமுக கூட்டணியான பாஜகவுக்கு நீட்டை ஒழிக்க மனமில்லை. அதை எதிர்த்து கேள்வி கேட்க துணிவற்ற அதிமுக& எதிர்க்கட்சிகள், திமுக அரசை குறைசொல்வது வெற்று அரசியல் மட்டுமே என காட்டமாக கூறியிருந்தார்.

நீட் வினாத்தாள்

நீட் வினாத்தாள்

இதனிடையே செவ்வாய்க்கிழமையான இன்று உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட் பதிவில் , நீட் பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது கடும் மன உளைச்சலையும் - வேதனையையும் தருகிறது. நீட் என்பது துரோகமும் - சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஒன்றியத்தின் நீட் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வாகாது என்ற கூறியுள்ளார். நீட் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதாக கமல் வைத்த அதே குற்றச்சாட்டைதான் உதயநிதி ஸ்டாலினும் வைத்துள்ளார்.

English summary
Udayanithi Stalin said in a tweet that The new example of the fact that NEET is only treachery and intrigue is that its question paper has sold for 35 lakhs. Suicide is not the solution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X