சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலுநாச்சியார் யாருன்னு தெரியாதா.. இங்க பாருங்க..ஹிந்தி சப்-டைட்டிலில் வீடியோ..மாஸ் காட்டிய கனிமொழி

Google Oneindia Tamil News

சென்னை: வேலுநாச்சியார் யார் என்றே தெரியவில்லை என்று மத்திய அரசு கூறிய நிலையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை முதலில் எதிர்த்த ராணி வேலு நாச்சியார்தான் என்று கனிமொழி எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்திய தேசத்தின் குடியரசு தினம் வருகிற 26-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினம் கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில் இதற்கு முன்பாகவே ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது.

2 ஸ்டூல் ஏறினாதான் முகத்தையே பார்க்க முடியும் போலயே.. சமாஜ்வாடியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர்2 ஸ்டூல் ஏறினாதான் முகத்தையே பார்க்க முடியும் போலயே.. சமாஜ்வாடியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர்

குடியரசு தின விழா

குடியரசு தின விழா

தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா மிகவும் பரம்பரியமிக்கதாகும். முப்படைகள் அணிவகுத்து செல்லும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாரத்தை, விடுதலை உணர்வை வெளிப்படும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்வது வழக்கம். அந்தந்த மாநிலத்தில் தேச விடுதலைக்காக பாடுபட்ட போராட்ட வீரர்கள் அடங்கியதாக அலங்கார ஊர்திகள் இருக்கும். இதில் சிறந்த அலங்கார ஊர்திகளுக்கு பரிசுகளும் கிடைக்கும்.

தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு

தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு

இந்த நிலையில் இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு தமிழக அரசின் அலங்கார ஊர்தி தகுதி சுற்றுக்கு சென்று இருந்தது. 4 வது சுற்று வரை சென்ற நிலையில்குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என்று தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் மட்டுமில்லாது கேரளா, மேற்கு வங்க உள்ளிட்ட சில மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

வேலுநாச்சியார், வ உசி யாரு?

வேலுநாச்சியார், வ உசி யாரு?

குடியரசு தின விழா அணிவகுப்புக்கு தமிழக அரசின் அலங்கார ஊர்தியை நிராகரித்ததற்கான சில காரணங்களை மத்திய அரசு கூறியபோது அதனை கேட்டு தமிழக மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கொதித்து போய் விட்டனர். வீர மங்கை வேலுநாச்சியார், வ உசி ஆகியோர் சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை என்றும் இவர்கள் யார் என்று தெரியாது என்றும் அதிகாரிகள் சொன்னதுதான் மக்களின் கோபத்துக்கு காரணம்.

ஸ்டாலின் கடிதத்துக்கும் பலனில்லை

ஸ்டாலின் கடிதத்துக்கும் பலனில்லை

இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தியை அனுமதிக்கும்படி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதமும் எழுதினார். ஆனால் முடியவே, முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறி விட்டது.

கனிமொழி பகிர்ந்த செம வீடியோ

கனிமொழி பகிர்ந்த செம வீடியோ

இந்த நிலையில்தான் வேலுநாச்சியார் வரலாறு குறித்த வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பார்கிந்துள்ளார் திமுக எம்.பி கனிமொழி. சுமார் 2.26 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் வேலுநாச்சியாரின் சுதந்திர போராட்ட வரலாறு, அவர் இந்திய விடுதலைக்காக அளித்த பங்களிப்பு குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கிழே ஹிந்தி வார்த்தைகளுடன் சப்-டைட்டில் வருகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தை முதலில் எதிர்த்த ராணி வேலு நாச்சியார்தான் என்று வீடியோவுக்கு மேலே கனிமொழி குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்த கனிமொழி எம்.பி.யை பலரும் பாராட்டிட வருகின்றனர்.

English summary
Kanimozhi MP has posted a video on his Twitter page saying that Rani velunachiyar, was the first to oppose the British government as the union government had said it did not know velunachiyar who was
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X