ஜெயலலிதா பெயர் இருப்பதை திமுகவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கல்வியில் புரட்சி செய்த ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் இருப்பதை திமுகவினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை: கல்வியில் புரட்சி செய்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் திமுக அரசு தெரிவித்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் சட்டசபையில் இன்று ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் அன்பழகன் புகார் தெரிவித்தார். மெரினாவில் உயர்கல்வி மன்றத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கவில்லை என அதிமுக புகார் தெரிவித்தது. ஜெயலலிதா சிலைக்கு ஒரு மாத காலமாக மாலை அணிவிக்கவில்லை என்றும் அன்பழகன் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள இசைப் பல்கலைக்கழகம் ஜெயலலிதா பெயரில்தான் தொடர்ந்து இயங்கி வருகிறது. பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது அதிமுக அரசு என்று கூறினார்.

ஸ்டாலின் விளக்கம்
இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செயல்படவில்லை என்பதற்கு அம்மா உணவகமே உதாரணம் என்று கூறினார். காழ்புணர்ச்சியுடன் செயல்பட தொடங்கியிருந்தால் அம்மா உணவகம் தொடர்ந்து இருக்குமோ? காழ்புணர்ச்சியுடன் செயல்பட தொடங்கியிருந்தால் அம்மா உணவகம் தொடர்ந்து இயங்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுக வெளிநடப்பு
கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட விழுப்புரம் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இருந்து எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்
செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப்பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி வெளிநடப்பு செய்வதாகவும் கூறினார். ஜெயலலிதாவின் பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் போவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று கூறினார்.

ஜெயலலிதாவிற்கு பெருமை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை கல்வியில் பல புரட்சிகள் செய்துள்ளார். ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை கல்விக்காக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். பல ஆரம்ப பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து. கல்வியில் புரட்சி ஏற்படுத்திய ஜெயலலிதாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாகவே பல்கலைக்கழகத்தை தொடங்கினோம் அதற்கு ஆளுநர் அனுமதி அளித்தார்கள். அதற்கு துணைவேந்தர், சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டது.

அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
தேர்தல் அறிவிக்கப்பட்டதால் முழுமையாக பல்கலைக்கழகத்தை நிறுவ முடியாமல் போனது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். முதல்வரும் உயர்கல்வித்துறை அமைச்சரும் அது தொடராது என்று கூறி விட்டனர். அதற்குப் பதிலாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் போவதாக கூறிவிட்டனர்.

துரோகம் செய்யும் திமுக அரசு
இது அரசியல் காழ்ப்புணர்ச்சிதான். ஜெயலலிதாவின் பெயர் இருப்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அம்மா உணவகம் ஏழை எளிய மக்களுக்காகவும் அனைவரும் வயிராற உண்ண வேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்டது. அதை மூடினால் அது ஏழை எளிய மக்களுக்குச் செய்யக்கூடிய துரோகம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications