Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பங்களாவில் படியேற மாட்டேன்! "கலைஞர் எப்படி பார்த்துகிட்டார் தெரியுமா?" மூத்த அமைச்சர் சபதம்- பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சரவையில் தான் எதிர்பார்த்த இலாக்கா கிடைக்கவில்லை என்று மூத்த அமைச்சர் ஒருவர் திமுகவில் அதிருப்தியில் இருக்கிறாராம். இதனால் இதுவரை அரசு கொடுத்த பங்களாவிற்கு கூட அவர் செல்லவில்லை என்று அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் அமைச்சரவையில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் வரலாம் என்று சில நாட்களாக தகவல்கள் வந்தபடி இருக்கின்றன. எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று ஒரு பக்கம் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் டெல்டா மாவட்ட எம்எல்ஏக்களை அமைச்சராக்க வேண்டும் என்றும் இன்னொரு பக்கம் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர்களின் செயல்பாடு, அவர்களின் மீதான புகார்கள் ஆகியவற்றின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலினும் ரிப்போர்ட் ஒன்றை தயாரித்து அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆலோசித்து வருகிறாராம்.

அதிருப்தி

அதிருப்தி

இந்த நிலையில்தான் அமைச்சரவையில் தான் எதிர்பார்த்த இலாக்கா கிடைக்கவில்லை என்று மூத்த அமைச்சர் ஒருவர் திமுகவில் அதிருப்தியில் இருக்கிறாராம். இதனால் இதுவரை அரசு கொடுத்த பங்களாவிற்கு கூட அவர் செல்லவில்லை என்று அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த சீனியர் மந்திரி, தனக்கு பவர்ஃபுல் இலாக்கா கிடைக்கும் வரை அரசு பங்களாவில் குடியேற மாட்டேன் என ஹோட்டலிலேயே இதுவரை தங்கியிருக்கிறாராம்.

ஹோட்டல்

ஹோட்டல்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சிறப்பான வாக்கு வித்தியாசத்தில் அந்த எம்எல்ஏ வெற்றிபெற்றார். இதையடுத்து தனக்கு பெரிய இலாகா கொண்ட அமைச்சரவை பொறுப்பு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்து இருக்கிறார். ஆனால் முதல்வர் ஸ்டாலினோ, அமைச்சரவை இலாகா ஒதுக்கும்போது அவருக்கு இளம் அமைச்சர்களுக்கு வழங்குவது போன்ற அதிக முக்கியத்துவம் இல்லாத இலாகாவை ஒதுக்கியிருந்தார். ஆனால் இளைஞர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காக, அமைச்சரவையில் புதியவர்களுக்கு பெரிய இலாகாக்கள் தரப்பட்டது. இதனால் அந்த அமைச்சர் முதல்வர் ஸ்டாலினை அதன்பின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற மறுத்து இருக்கிறார்.

சந்திக்க மறுப்பு

சந்திக்க மறுப்பு

முதல்வரை சந்திக்காமல் .. அரசு பங்களாவில் குடியேறாமல்.. ஹோட்டல் ரூமில் கதவை அடைத்து கொண்டு அந்த அமைச்சர் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து 2 முக்கிய நபர்கள் அந்த அமைச்சரவையை சமாதானப்படுத்த தூது போனார்கள் என்று கூறப்படுகிறது.

சமாதானம்

சமாதானம்

ராயப்பேட்டையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அந்த அமைச்சர் தங்கி இருந்துள்ளார். முதலில் திமுகவின் இரண்டு தலைகள் முதலில் அவருக்கு போன் செய்து சமாதானம் பேச முயன்று உள்ளனர். ஆனால் அந்த அமைச்சர் பேசாத காரணத்தால், இரண்டு திமுக தலைகளின் சார்பில் இருவர் நேராக அந்த ஸ்டார் ஹோட்டலுக்கே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. வாங்க அறிவாலயம் போகலாம்.. முதல்வரை பாருங்க.. உங்களை அவர் ரொம்ப மதிக்கிறார்.
இப்படி வருத்தத்தில் இருக்க வேண்டாம், என்று கூறி சமாதானம் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

 கண்கலங்கினார்

கண்கலங்கினார்

அதுவரை இறுக்கமாக இருந்த அந்த அமைச்சர் உடனே உடைந்து கண் கலங்கி அழ ஆரம்பித்துள்ளார். கலைஞர் எப்படி பார்த்துக்கொண்டார் தெரியுமா?. அமைச்சரவை வாய்ப்பு தராமல் இருந்திருந்தால் கூட எனக்கு இப்படி இருந்திருக்காது. கொடுத்து சாதாரண இலாகா என்பதுதான் எனக்கு வருத்தம் என்று கூறியுள்ளார்.

அப்பா கலக்கம்

அப்பா கலக்கம்

அதோடு அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு பவர்புல் அமைச்சரவை இலாகாக்கள் கொடுத்துள்ளார்கள். அடிப்படை திமுககாரர்களுக்கு கொடுக்க வேண்டிய இலாகா இவை. மின்சாரத் துறையை எனக்கு கொடுத்து இருக்கலாம். ஆனால் அதிமுகவில் இருந்து வந்து செந்தில் பாலாஜிக்கு அந்த துறையை கொடுத்துள்ளனர். ஆனால் எனக்கு சின்ன துறையை கொடுத்துள்ளனர் என்று கலங்கி இருக்கிறார்.

திமுக தலைகள் சமாதானம்

திமுக தலைகள் சமாதானம்

இதையடுத்து அந்த தலைவர்கள் இரண்டு பேரும், இது உங்கள் அரசு என்று, முதல்வர் ஸ்டாலின் உங்களுக்கு உரிய துறையை கொடுப்பார். 3 மாதங்களில் இலாகாவை மாற்றுவார்கள். கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்களாம்.

சமாதானமாகி உள்ளார்

சமாதானமாகி உள்ளார்

இதை கேட்ட பின்புதான் அந்த அமைச்சர் சமாதானமாகி உள்ளார். தனது துறையையும் கடந்த 7 மாதமாக அந்த அமைச்சர் தீவிரமாக கவனித்து வந்துள்ளார். ஆனால் 7 மாதம் ஆகியும் அந்த அமைச்சர் இலாக்கா மாறாத காரணத்தால் அதிருப்தியில் இருக்கிறாராம்.

சபதம்

சபதம்

இதனால் இலாக்கா மாறும் வரை அரசு பங்களாவுக்கு குடியேற மாட்டேன் என்று அமைச்சர் சபதம் போட்டுள்ளாராம். இதன் காரணமாக இப்போது அவர் ராயப்பேட்டை பகுதியிலுள்ள ஸ்டார் ஓட்டலில் இருந்து கொண்டே அமைச்சரவை பணிகளை செய்து வருகிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+